உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது தினமலர்

டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது தினமலர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், 'நீட்' தேர்வு குறித்த கருத்தரங்கம் மற்றும் மாதிரி தேர்வு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கிறது.பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்று மருத்துவம் படிப்பது.அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியும் இணைந்து, வரும் 26ம் தேதி சனிக்கிழமை காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை, சென்னை கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், 'நீட்' மாதிரி தேர்வை நடத்துகின்றன.இதுகுறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது.நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகள், பாடங்களை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குவர்ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும் தேவையான தகுதிகள், மதிப்பெண்கள் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைவதை தவிர்க்கலாம்நிகழ்ச்சியில் நடத்தப்படும் நீட் மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதோடு, நுண்ணறிவையும் பெற முடியும்.தேர்வின் அடிப்படையில், தனித்தனி மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும். அதன் வாயிலாக, மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறியலாம்ஆர்.ஜி.ஆர்., அகாடமி இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரி தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும்.இதில் பங்கேற்க விரும்புவோர், 'NEET' என, டைப் செய்து, 95667 77833 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பாரத புதல்வன்~தமிழக குன்றியம்
ஏப் 20, 2025 19:37

பலரது மருத்துவ கனவுகள் நிறைவேற தினமலர் நடத்தும் மாதிரி நீட் தேர்வு அனைவருக்கும் பயனளிக்கும், நிச்சியம் நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முகத்தில் கரியை பூசும் அளவிற்கு மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்..... வாழ்த்துக்கள் தினமலரின் மகத்தான சேவைக்கு நன்றிகள் கோடி.


Kasimani Baskaran
ஏப் 20, 2025 08:35

தினமலரை பாராட்ட வார்த்தையில்லை. பலரது கனவுகளை நனவாக்க வாழ்த்துகள்.


S. Venugopal
ஏப் 20, 2025 07:08

தினமலரின் பல சேவைகளில் இந்த மிகச் சிறந்த சேவை பாராட்டத்தக்கது. மாணவர்கள் இந்த சந்தர்ப்பத்தினை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்