உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்

தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்

சென்னை: தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? மாநிலத்தில் என்ன நடக்கிறது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.ரேஷன் கடைகளுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்தமைக்கு வழங்க வேண்டிய ரூ.141 கோடியை விடுவிக்கக்கோரி தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று (ஜூன் 24) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dad9w51e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0* தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? மாநிலத்தில் என்ன நடக்கிறது? இது அரசை நடத்தும் வழியல்ல.* மாநில அரசு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.* நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டாம் என அரசு முடிவு செய்துவிட்டதா? * இது குறித்து தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தொகையை வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.* இந்த வழக்கு விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 24, 2025 18:38

கடலில் கரைத்த பெருங்காயமா? அல்லது கேட்ட கமிஷன் கொடுக்கவில்லையா? உடனே மத்திய அரசு காசுகொடுக்கல என்று வீதிக்கு வீதி ஒப்பாரி வைப்பார்கள்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 24, 2025 18:36

நிதிக்கும் நெருக்கடி, நீதிக்கும் நெருக்கடி.


rama adhavan
ஜூன் 24, 2025 18:24

அப்படி நிதி நெருக்கடியில் ரேஷனில் இலவசமாக, குறைந்த விலையில் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி விடலாமே? 129 கோடி தொகை நிலுவைத் சிறிது இல்லை. இது அரசுக்குத் தெரியாதா?


Indhuindian
ஜூன் 24, 2025 15:28

நிதி நெருக்கடியில்ல அப்படியே இருந்தாலும் கடன உட ன வாங்கி சமாளிச்சிடுவோம் நிதி திரட்டத்தான் நெருக்கடி


JANA VEL
ஜூன் 24, 2025 14:53

தமிழ்நாடு நாட்டிலேயே ஓர் முன் மாதிரி மாநிலம் என்பது ஐகோர்ட்டுக்கு யாரும் சொல்லலியா. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.