உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? அரசை கேட்கிறார் ராமதாஸ்

இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? அரசை கேட்கிறார் ராமதாஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரையில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்தனர். இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை

வெள்ளத்தில் மிதக்கும் கோவை, மதுரையில் மின்சாரம் தாக்கி 4 அப்பாவிகள் உயிரிழந்தனர். அடுத்த சில நாட்களில் சென்னை மாநகரம் என்ன ஆகுமோ? இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதற்கு முன்பே மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் அதன் பாதிப்பை அனுபவிக்கத் துவங்கி விட்டார்கள். புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை பெய்தால் விரைவாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்களும், பாசனக் கால்வாய்களும் தூர்வாரப்படாதது தான் காரணம் ஆகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g4gsshqh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

4 பேர் பலி

மதுரை மாவட்டம் மேலூரில் கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அய்யாக்கண்ணு, கடலூர் மாவட்டம் தொழுதூரை அடுத்த ராமநத்தம் பகுதியில் காயத்ரி என்ற 13 வயது சிறுமி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் குமரேசன் என மொத்தம் 4 பேர் ஒரே நாளில் அறுந்து விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர். மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மிகச்சாதாரணமான பராமரிப்புப் பணிகளைக் கூட மேற்கொள்ளாமல் தமிழக அரசும், மின்சார வாரியமும் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளன என்பதற்கு மிகவும் வேதனையான எடுத்துக்காட்டு தான் இந்த உயிரிழப்புகள். இவை அனைத்துக்கும் தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.வடகிழக்கு பருவமழைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி , அவ்வப்போது தலைமைச் செயலாளர் என தமிழக அரசு நிர்வாகம் பல முறை பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடனும், பிற அதிகாரிகளுடனும் கலந்தாய்வுகளை நடத்தினார்கள். அவை அனைத்தும் பெயரளவிலான செயல்பாடுகளாகவே உள்ளன என்பதும், களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை என்பதும் சில மணி நேரம் பெய்த லேசான மழையிலேயே அம்பலமாகியுள்ளது. இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.

பருவமழை

வடகிழக்கு பருவமழையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படும் சென்னை அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான மழையை எதிர்கொள்ளவிருக்கிறது. 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் கூடுதலான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை மாநகரம் என்னென்ன பாதிப்புகளை எதிர்கொள்ளுமோ, சென்னை மாநகர மக்கள் எத்தகைய இன்னல்களையெல்லாம் எதிர்கொள்வார்களோ? என்ற அச்சமும், கவலையும் மனதை வாட்டுகின்றன.

மழை பாதிப்பு

மழை வெள்ளத்தை எதிர்கொள்ள படகுகள் உள்ளிட்ட கருவிகள் மிகவும் அவசியம் தான் என்றாலும் கூட, அவற்றை மட்டுமே தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நம்பிக் கொண்டிருக்கின்றனவோ? என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சென்னையை மழை தாக்கும் வரையிலான ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. அவற்றை பயன்படுத்திக் கொண்டு மழை பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர மக்களைக் காக்க அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Palanisamy T
அக் 15, 2024 07:04

ஒருவேளை நீங்கள் ஆட்சியிலிருந்தால் என்ன என்னவெல்லாம் எப்படி எப்படிச் செய்தீர்ப்பீர்கள் என்பதையாவதுச் சொல்லுங்கள். ஒருவேளை இன்றைய ஆட்சியார்களுக்கு ஆட்சி அனுபவம் போதவில்லையோ?


M S RAGHUNATHAN
அக் 14, 2024 16:35

தமிழக அரசிற்கு தமிழ் நாடு என்றால் சென்னை மட்டும் அல்ல என்று யாராவது தெரியப் படுத்த வேண்டும். மொத்த அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும் சென்னை தான் தமிழ் நாடு என்று இருக்கிறார்கள்.


GMM
அக் 14, 2024 14:18

குறைந்த, அதிக மின் அழுத்த கம்பி அறுந்தால் மின் துண்டிப்புக்கு, இது வரை உலகில் fault finder instrument கண்டுபிடிக்க வில்லை.? பொது மின் சாதனம் அருகில் மந்திரிகள் செல்ல வேண்டிய அவசியம் யில்லை. ?


GMM
அக் 14, 2024 14:06

வீதியின் மழை நீர் சேகரிக்கப்பட்டு ஓடை யில் இணைத்து பின் ஏரி , குளம் குட்டையில் சேரும். storm water drain நூறு மீட்டர் வரை கூட தடையின்றி இருக்காது. ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைக்கிடங்கு . குளம், குட்டையில் வீடு மனைகள் , அரசு அலுவலகங்கள் . மன்னர்கள் செய்த அமைப்பு சர்வாதிகாரிகள் மூலம் உருக்குலைந்து விட்டது. மோட்டார் வைத்து நீரை உறிஞ்சி எங்கும் வெளியிட முடியாது. எதிர்கொள்ளும் மழை நாடகம்.


Ganapathy Jayaraman
அக் 14, 2024 14:00

நீங்கள் எப்போதும் மோசமாக பேசுகிறீர்கள். இன்றைய செய்திகளைப் பார்த்து, தமிழக அரசைப் பாராட்டுங்கள். 487 கோடியில் கலைஞர் பூங்காவைக் கட்டப் போகிறார்கள்.


Sridhar
அக் 14, 2024 13:44

போனவருசம் சென்னையில வெள்ளம் வந்தபோது இவனுக செஞ்ச கோமளித்தனத்தை பாத்தபிறகு நாம் எல்லோரும் நினைச்சிருப்போம் வரும் தேர்தல்ல தீம்கா நல்லா அடி வாங்கும்னு. ஆனா நடந்தத பாத்தீங்கன்னா மக்கள் எப்படிப்பட்டவங்கனு தெரியவரும். இந்த மாதிரி ஜனங்க துன்பத்தையே சுகமா நினச்சு வாழற ஞானிங்க . அவுங்களுக்கு வெள்ளம் வந்தா பிடிச்சிருக்கு, நூறு பேரு அதுல செத்தா அத ரசிச்சு திராவிட மாடல்னு பாராட்டுவாங்க. அவுங்களுக்கேத்த அரசு - அரசுக்கேத்த மக்கள், இதுல நாம ஏன் வீனா தலையிட்டுக்கிட்டு


ramesh
அக் 14, 2024 17:31

செம்மரம் பாக்கம் ஏரியை ஜெயலலிதா ஆட்சியில் திறந்து விட்ட போது மக்கள் என்ன பாடு பட்டார்கள் . மறந்து விட்டதா


krishna
அக் 14, 2024 13:39

200 ROOVAA OOPIS CLUB. ODI VANDHU MUTTU KODUNGSL.ILLAI END4AAL COOLIE CUT.


krishna
அக் 14, 2024 13:36

SIR NEENGA VERA.


SUBRAMANIAN P
அக் 14, 2024 13:32

இந்த முறை தன்னார்வலர்கள் மேலும் அதிகமாக தேவைப்படுகிறார்கள். ஏனென்றால் மழை மிகவும் அதிகமாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். நாங்கள் படகு தருகிறோம். பிழைப்பது உங்கள் திறமை.


வைகுண்டேஸ்வரன்
அக் 14, 2024 13:16

வாழ்ந்து வரும் மாநிலத்தையே வைது கொண்டு வாழும் negative attitude கொண்டவர்கள் தான் இங்க அதிகம் பேர். திருத்தவே முடியாது. என்னவோ இந்தியாவின் பிற மாநிலங்களில் மழை பெய்தாலும் ஒரு இன்ச் தண்ணீர் கூட நிற்காமல் வடிந்து விடுகிறது போல எழுதிக்கிட்டு.. அட போங்கய்யா. போராடிக்குது.. எப்ப பார்த்தாலும் நெகடிவ் சிந்தனையிலேயே வாழறாங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 14, 2024 14:36

வாழ்ந்து வரும் மாநிலத்தையே வைத்து கொண்டு..... காப்பாற்றும் ராணுவ வீரர்களை குண்டெறிந்து கொல்கிறார்கள் நண்பரே.. இதெல்லாம் ஒரு விஷயமில்லை.... negative attitude கொண்டவர்கள் தான் இங்க அதிகம் பேர்.... நீங்கள் இப்படிச் சொல்வது positive attitude ஆ ??


I am a Sanghi + Kafir…but not a Family slave
அக் 14, 2024 14:59

அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் ? எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா ?


Nagarajan D
அக் 14, 2024 15:11

நண்பரே எந்த அரசும் இவனுங்கள போல 4000 கோடி ஏப்பம் விட்டுட்டு வாயிலேயே வடை சுட வில்லை


சமீபத்திய செய்தி