உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி

துரோகம் செய்தது தி.மு.க., தான்: இ.பி.எஸ்., பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : '' நாட்டிற்கு துரோகம் செய்தது தி.மு.க., தான். ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ..பி.எஸ்., கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் இல்லை. தி.மு.க., தான் நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும், நான் முதல்வராக இருந்த போதும், ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. இது குறித்து தினசரி செய்திகள் வந்து கொண்டு உள்ளன. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி.மத்தியில் தி.மு.க., 16 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அப்போது ஏன் கல்விக் கொள்கையில் ஏன் கவனம் செலுத்தவில்லை. அப்போதே கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வந்து இருக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மக்கள் பற்றி கவலையில்லை. மாணவர்கள் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி சுமத்துவது தான் தி.மு.க.,வின் வாடிக்கைமதுரையில், பந்தல்குடி கால்வாயை மறைத்தது மோசமான ஆட்சி என்பதற்கு சான்று. அவர்களுக்கே கால்வாயை பிடிக்கவில்லை. இதனால் முதல்வர் வரும் போது திரைபோட்டு மறைத்தனர்.சாக்கடை நீர் செல்லும் கால்வாயை திரை போட்டு மறைத்தனர். சாக்கடை நீர் கால்வாய் தூர்வாராததால் துற்நாற்றம் வீசுகிறது. அது அவர்களுக்கே பிடிக்கவில்லை.ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக த.வெ.க., தலைவர் விஜய் என்னுடன் பேசவில்லை. ஆதவ் அர்ஜூனா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது. அதனை உடைக்க வேண்டும் என முயற்சிக்க வேண்டாம். அது நடக்காது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

madhesh varan
ஜூன் 02, 2025 12:33

ஓ பி எஸ் கு, சசிகலாவுக்கு, தினகரனுக்கு, நீ துரோகம் பண்ணுனது எல்லாம் கூட பரவாயில்ல, தமிழக மக்களுக்கு நீ பண்ணுன துரோகம் கொஞ்சமா நஞ்சமா ? தமிழக வேலைவாய்ப்புகளை வடக்கணுங்கலுக்கு போக்க இந்த டப்படியாறு தான் காரணம், தவல்ந்தபாடியரு போன்ற அடிமகளை துரத்துவதே பரவாயில்லை,


Murugesan
ஜூன் 01, 2025 21:59

திமுக அயோக்கியர்கள் ஆட்சிக்கு வர முக்கிய காரணம் இந்த நயவஞ்சக எடப்பாடி தான்


Raja k
ஜூன் 01, 2025 20:38

துரோகம் பற்றி நீங்க பேசலாமா? சசிகலா உங்களை நம்புனாங்க பாருங்க


ஜூன் 02, 2025 10:28

சசிகலாவுக்கு துரோகம் செய்வது பாவமா ? சசிகலா அதிமுக தலைவிக்கு துரோகம் செய்தார் ..பதிலுக்கு எடப்பாடி கணக்கு தீர்த்தார் ..திமுக தமிழ் நாட்டுக்கு செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா ..ஈழமக்களுக்கு ஆரம்பித்து . காவிரி பிரச்னையில் துரோகம் ...மீத்தேன் துரோகம் ..கச்சத்தீவில் துரோகம் ..தமிழ் நாட்டை கடனில் மூழ்கடித்த துரோகம் ..


ஜூன் 02, 2025 10:33

கருணாநிதி ..நெடுஞ்செழியனை ஓரம்கட்டி எப்படி முதல்வரானார் தெரியுமா ..வனவாசம் படியுங்கள் புரியும்


முருகன்
ஜூன் 01, 2025 20:30

மக்களிடம் கேட்டால் யார் துரோகி என்பது தெரியும் பதவிக்கு வந்த முறை அப்படி


S. Balakrishnan
ஜூன் 01, 2025 19:52

ஆயிரம் தான் இருந்தாலும் EPS சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஒரு எதிர் கட்சி தலைவராக நல்ல‌ முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் விழிப்புணர்வுடன் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் திமுகவின் அட்டூழியங்கள் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. எந்த கொம்பனாலும் இனிமேல் இந்த அளவு தமிழ் நாட்டை குடும்ப சொத்தாக மாற்ற முடியாது. இது சத்தியம்.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 01, 2025 22:25

அப்ப சசிகலா திநகர் திவாகர் இளவரசி விவேக் வந்தமணி மஹாதேவன் சகாதேவன் நடராஜன் பாஸ்கரன் இவர்கள் எல்லாம் யார் குடும்பம்


ஜூன் 02, 2025 10:31

தமிழகத்தின் முதல்வராக கருணாநிதியை ஆக்கிய எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கி அவருக்கு துரோகம் செய்யவில்லையா ..அதற்க்கு தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியை வனவாசம் அனுப்பியது மறந்துவிட்டதா


Sundar R
ஜூன் 01, 2025 19:40

வாரிசு அரசியல், குடும்ப‌ அரசியல், சினிமா அரசியல் மற்றும் ஊழல் அரசியல் ஆகியவற்றை தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அடியோடு ஒழிப்போம்.


Svs Yaadum oore
ஜூன் 01, 2025 19:37

தி.மு.க., தீர்மானத்தில் துரோக அ.தி.மு.க., எனக்கூறியுள்ளனராம் ...எவன் எவனை சொன்னால் என்ன ??.......மட்டன் கோலா உருண்டை , மட்டன் ப்ரை , மட்டன் பிரை ஆயில் , மட்டன் சால்ட் , வஞ்சிரம் ப்ரை , ஆற்று மீன் ப்ரை , சிக்கன் மசாலா , சிக்கன் ப்ரை , இறால் மசாலா , அவிச்ச முட்டை , குலாப் ஜாமுன் என்று இந்த சாப்பாடு சாப்பிட்டு இங்குள்ள திராவிடனுங்க வோட்டு போட்டுடுவாங்க ....


சாமானியன்
ஜூன் 01, 2025 18:47

அதிமுக ஏன் திமுகவின் டாஸ்மாக் ஊழல் மற்றும் குவாரி ஊழல்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. ஏதாவது அன்டர்ஸ்டேங்க் ? மோடி ஐயா ! ஒரு சர்ஸிகல் ஸ்ட்ரைக் நடத்தி மாநில கடனை குறைக்கனும்.


V Venkatachalam
ஜூன் 01, 2025 17:58

பந்தல் குடி கால்வாய் இந்திய அளவில் புகழ் பெற்று விட்டது. இந்த புகழுக்கு முழு சொந்தக்காரர் ஸ்டாலின் தான். நம்மை வரவேற்கவே திரைச்சீலை கட்டி அழகு படுத்தி இருக்கிறார்கள் என்று ஸ்டாலின் ரொம்ப சந்தோஷப்பட்டு விட்டார். அவரு சந்தோஷப் படும்போது நாம் சந்தோஷப் படாமல் இருக்க கூடாது. நாமும் சந்தோஷப் படுவோம்.


Raghavan
ஜூன் 01, 2025 16:43

இரண்டு கழகங்களுமே ஊழல் செய்வதிலும் கொள்ளை அடிப்பதிளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. மாறி மாறி இரண்டுபேருமே ஒருவர் முகத்தில் ஒருவர் துப்பிக்கொண்டு இருக்கிறார்கள். சாக்கடை தண்ணீரில் எந்த சாக்கடை தண்ணீர் நல்லது என்று சொல்லமுடியுமா எல்லாமே சாக்கடை தான்.


V K
ஜூன் 01, 2025 19:45

அதான் நோட்டாவுக்கு ஒட்டு போடுங்க


முக்கிய வீடியோ