உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., பளீச் பதில்!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., பளீச் பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''டில்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை,'' என நிருபர்கள் சந்திப்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பதில் அளித்தார்.அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு மற்றும் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அ.தி.மு.க., சார்பில் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இன்று சட்டசபை கூடியதும் இது குறித்து விவாதம் எழுந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ne49e648&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: சட்டசபை விதி 72ன் கீழ், அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அளித்துள்ளோம். இது குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு, ''சபாநாயகர் அனுமதி அளித்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும்'' என துரைமுருகன் கூறினார்.பின்னர் விதியின் கீழ், நம்பிக்கையில்லா தீர்மானம் எனது பரிசீலனையில் இருக்கிறது என சபாநாயகர் பதில் அளித்தார். அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்ததை கண்டித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக அமைச்சர் பொன்முடி பேசியது கண்டனத்திற்குரியது. பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கிய பிரச்னைகள் குறித்து பேச எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதி தருவதில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்து, நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். இவர்கள் ஏன் எரிச்சல் அடைகிறார்கள். தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது. எங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டணி வைத்துள்ளோம். யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.அமித் ஷா கூட்டணி அரசு அமைக்கப்படும் என கூறியதாக நிருபர்கள் எழுப்பி கேள்விக்கு, இ.பி.எஸ்., அளித்த பதில்: கூட்டணி அரசு அமைப்பதாக அமித் ஷா கூறவில்லை. நீங்கள் ஏதோ தப்பாக புரிந்து கொண்டு ஏதோ வித்தை காட்டுக்கிறீர்கள். இந்த வித்தையை எல்லாம் விட்டுருங்க.அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி, ஆட்சி அமைக்கும். அதை புரிந்து கொள்ளுங்கள். டில்லிக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு நான் என்று அமித் ஷா தெளிவாக கூறிவிட்டார். இதில் ஏதே விஞ்ஞான மூளையை எல்லாம் பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விட்டுருங்க, நாங்கள் பார்த்து கொள்கிறோம். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

அப்பாவி
ஏப் 16, 2025 19:26

இதுக்குதான் தமிழ்நாட்டுக்கு வந்தா தமிழில் குய்ட்டணி ஏசணும்கறது. ஜும்லா அமைச்சர் இந்தில அடிச்சு உட்டா யார் பொறுப்பு?


TRE
ஏப் 16, 2025 15:51

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா இ.பி.எஸ்., பளீச் என


jaya
ஏப் 16, 2025 15:44

இங்குள்ளவர்கள் குடித்து ஒழிகிறார்கள் . விடியல் அதில் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது . தமிழ் நாடே வடக்கத்தியானை நம்பித்தானிருக்கிறது. இது 15 வருடங்களுக்கு முன்பிருந்தே இதே நிலை. கோயம்புத்தூரில் பி ஜே பி வந்த்ததனால் வடக்கத்தியான் வந்து விட்டார்களென்று பாடும் சொம்பே , புரிந்துகொள்.


Sridhar
ஏப் 16, 2025 14:18

இவர் தலைமையில் னு சொல்லிட்டாருல்ல. அப்புறம் என்ன? தேர்தல்ல ஜெயிக்கும்போது பழனிக்கே முழு மெஜாரிட்டி கிடைச்சிடுச்சுன்னா கூட்டணி ஆட்சி கிடையாது. கூட்டணி கட்சிகள் சேர்ந்துதான் மெஜாரிட்டினா நிச்சயம் கூட்டணி ஆட்சிதான். அது அப்போ பாத்துக்கலாமே?


Velan Iyengaar
ஏப் 16, 2025 16:34

ஹி ஹி ஹி ஆசையை பாரு ஆசை இருக்கு தாசில் பண்ண ... மாசம் ருக்கு கழுதை மேய்க்க முதலில் எத்தனை தொகுதியில் பிணைத்தொகை பறிபோகப்போகுது என்று கணக்கு பார்க்க சொல்லுங்க ....


abdulrahim
ஏப் 16, 2025 13:59

ஒரே ஒரு போன் கால் டெல்லியில் இருந்து வரட்டும் அப்புறம் தெரியும் இந்த உதறல் சாமியின் தைரிய லட்சணம்....


Dharmavaan
ஏப் 16, 2025 13:34

இ பி எஸ் கட்டுமரம் வழியில் செல்கிறார் பிஜேபி உஷாராக இருக்க வேண்டும்.


Velan Iyengaar
ஏப் 16, 2025 13:10

இப்படி பேசிட்டயா ??? போடுறா ஒரு ரைட சம்பந்தி வீட்டுக்கு போகலாமா ?? இல்ல மகன் வீட்டுப்பக்கம் வண்டிய விடலாமா ??


Dharmavaan
ஏப் 16, 2025 13:29

உளறல்


Velan Iyengaar
ஏப் 16, 2025 13:09

முகத்தில் பளீச் என அறைஞ்சாமாதிரி இருக்கா இல்லையா ??? நமக்கு காமெடி டைம் சிரித்து சிரித்து மகிழ்வோம்


Anbuselvan
ஏப் 16, 2025 12:49

இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதை போல மைனாரிட்டி அரசு/ஆட்சி அமைவதற்கு சாத்தியம் இல்லை.


Ganesan
ஏப் 16, 2025 12:38

ஐயா எடப்பாடி ஐயா நான் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன் உங்களுக்கு மானம் ரோசம் என்பது இருக்குதா இல்லையா


Barakat Ali
ஏப் 16, 2025 13:11

நல்ல கேள்வி ..... அதே கேள்வியை பொய் வாக்குறுதி கொடுத்து சனங்களை ஏமாத்தி பதவி சுகம் அனுபவிக்கிற களவாணிகளையும் கேளுங்க .....


Mettai* Tamil
ஏப் 16, 2025 13:16

அவர் வச்சிருக்கார் ...இதை அப்படியே உங்க ஸ்டாலின் ஐயா கிட்ட கேட்டு பாருங்க ..1967 லிருந்தே இல்லைங்க என்று சொல்வார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை