மேலும் செய்திகள்
கை விலங்கிட்டு நாடு கடத்தி விடுவர்!
26 minutes ago | 6
தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
வேலுார்: தேர்தலில் பண பட்டுவாடா தொ டர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராக 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ வந்த தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்தை நீதிபதி கண்டித்தார்.வேலுார் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் பதுக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, வேலுார் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது, 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் புடைசூழ அவர் வந்ததால், நீதிபதி அது குறித்து கேள்வி எழுப்பினார்.'நீதிமன்றத்திற்கு இதுபோன்று கும்பல் சேர்த்துக் கொண்டு வரக்கூடாது' என, எம்.பி.,யை கண்டித்தார். பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி சக்திகுமார், இவ்வழக்கில் கதிர் ஆனந்த் இன்று மீண்டும் ஆஜராக வேண்டும் எ ன, உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
26 minutes ago | 6
1 hour(s) ago