உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெறும் பஞ்ச் டயலாக்; உதயநிதி விமர்சனம்

வெறும் பஞ்ச் டயலாக்; உதயநிதி விமர்சனம்

சென்னை: முதல்வர் விஜய் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்குகளும் இருந்ததே தவிர, சட்டம் ஒழுங்கு குறித்து எந்த பதிலும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபையில் கவர்னர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதல்வர். அவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single takeல் shoot செய்ய வேண்டும் என்று சபாநாயகர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sgp3l23e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,மின்வெட்டு, விவசாயிகள் பிரச்னை, மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழகத்துக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது முதல்வராக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sankaranarayanan
ஜூன் 23, 2026 20:12

எதிர் கட்சி தலைவர் என்ற பதவியையும் கட்சியில் எவ்வளவோ மூத்த பக்குவம் அடைந்தவர்கள் இருக்கும்போது இந்த தத்தாரிக்குதான் கொடுக்க வேண்டுமமா இதிலேகூட வாரிசு அரசியலா வேண்டும் அவருக்கு பேசவும் தெரியலே என்ன சொல்வதென்று புரிஞ்சு பேசவும் தெரியலே ஆண்டவரின் புள்ளை என்ற ஒரேஒரு தகுதிதான் இருக்கிறது இவர் பெண்களுடன் கும்மாளம் அடித்தது மக்களுக்கு தெரியாதா அரசியலைப்பற்றித்தான் இவர் இனி பேச வேண்டும் வீணாக முதல்வர் விஜய்யின் குடும்பத்தைப்பற்றி இவர் வெளியில் பேச தகுதியே கிடயாது இப்படி இனி பேச ஆரம்பித்தால் பிறகு இவரைப்பற்றி பேச பூதாகாரமாக வெடிக்கும் அதை அறவே நிறுத்த வேண்டும்


Dum
ஜூன் 23, 2026 14:44

உதயநிதி கேட்ட கேள்விகள் அனைத்தும் அபத்தம் . முதல்வர் பேச்சுக்கு அந்த ஆள் கூறும் விமர்சனம் அதை விட அபத்தம் .


TCT
ஜூன் 23, 2026 14:33

Now DMK will start abusing Vijay with Personnel Issues. Following that all the Tamil Press which are Secular and have full freedom also follow DMK to abuse Vijay with Personnel Issues.


Prasanna Krishnan R
ஜூன் 23, 2026 14:20

டாய் பட்டர் சன். முதலில் நீ உண்மையிலேயே கச்சிதமானவனா? நீ அதிகாரத்தில் இருந்தபோது சினிமா சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறாய். நீயும் முன்பு ஒரு நடிகர்தான்.


புதிய வீடியோ