உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., உறுதி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ., உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும்'' என சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம் மற்றும் மாதவச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என, 24 பேரை கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=10vtaaz5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே வழக்கை சி.பி.ஐ., க்கு மாற்றக்கோரி அ.தி.மு.க., - பா.ம.க., தே.மு.தி.க.,பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி கடந்தாண்டு நவ., 20ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இந்த வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) இந்த வழக்கின் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும்'' என சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிந்தனை
ஏப் 16, 2025 08:27

கூடாது. நீதிமன்றம் இருப்பது தீர்ப்பை தள்ளி வைக்கத்தான். தீர்ப்பை கொடுக்க இல்லை... மக்கள் வரியில் சூப்பர் சாப்பாடு....


மீனவ நண்பன்
ஏப் 15, 2025 18:38

December 2024 முதல் நான்கரை மாதம் முடிந்து மேலும் மூன்று மாதம் அவகாசம் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?


Ramasamy
ஏப் 15, 2025 14:48

இதற்கு என்ன பதில் சொல்வார் அப்பா என்று தன்னக்கு தானே கூறும்......


ஆரூர் ரங்
ஏப் 15, 2025 14:31

தலைக்கு பத்து லட்சம் கொடுத்தபோதே வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. கள்ளச்சாராயம் வேறு விஷச் சாராயம் வேறு என்ற புதுமையான விளக்கம் வந்த போதே இது எதிர்பார்க்கப்பட்டதுதான். எல்லோரையும் விலைக்கு வாங்கும் திறமையுள்ள திமுக குடும்ப ஆட்சியை ஜனநாயக முறையில் அழிப்பது கடினம். மாற்று முறையில் அழிக்கப்பட வேண்டும்.


N Srinivasan
ஏப் 15, 2025 14:27

இந்த வழக்கில் சென்னை நீதி மன்றம் முதல் அமைச்சர் அல்லது துணை முதல் அமைச்சர் கள்ளக்குறிச்சி போய் மக்களை சந்திக்க வேண்டும் என கட்டளை இட்டதே அது நடந்ததா? ஏன் மக்கள் எல்லோரும் இவ்வளவு மறதி படைத்தவர்களாக இருக்கிறோம் ?


புதிய வீடியோ