உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!

கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!

சென்னை: ''கன்னட மொழி குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப்பேசவில்லை'' என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். கன்னட மொழி குறித்து பேசியதற்கு, கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவருக்கு நடிகர் கமல் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கமல் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u9aa2q1a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதையை கொண்டுள்ளேன். நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதை தான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன். நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தொனியில் தான் பேசினேன். கன்னட மொழியை தாழ்த்தும் நோக்கத்தில் பேசவில்லை. சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்க கூடாது.இந்த தவறான புரிதல் தற்காலிகமானது தான் என நம்புகிறேன். அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். நான் ஒரு மொழியின் மீது மற்றொரு மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன். கன்னட மக்களுக்கு உள்ள மொழிப்பற்றை நான் மதிக்கிறேன். பொது அமைதியின்மை, விரோதத்திற்கு ஒரு போதும் இடம் கொடுக்க நான் விரும்பவில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 92 )

rajan_subramanian manian
ஜூன் 23, 2025 09:45

உப்பே சாப்பிடாமல் இருப்பவர்களில் இந்த உலக்கை நாயகன் முதலிடம்.


M Ramachandran
ஜூன் 20, 2025 11:53

ஸ்டாலின் னுக்கு ஏற்ற தம்பி.


sankar
ஜூன் 18, 2025 20:06

சினிமாவில் எனக்கு பல தாய் உண்டு மனோரமா காந்திமதி அது போல கன்னடம் மலையாளம் தெலுகு தமிழ் போன்ற பல தாய்களும் உண்டு தமிழில் இருந்து தோன்றியது கன்னடம் என்று சொன்னது கன்னடத்தி சித்தி என்று புரிந்து கொண்டார்கள் கன்னடத்தை உயர்த்தி பேசிய என்னை மன்னிப்பு கேட்க சொல்வது தயை மக்களிடம் மன்னிப்பு கேட்பது நாகரீகமாகாது அந்த நிலை கன்னடத்துகிய எட்டப்பட கூடாது என்பதால் ஏன் படத்தை விடுறாங்கப்பா உங்கள் கால்களில் இனமானதா தலைவரின் வழி வந்ததால் உங்களின் கைகளில் இந்த விஅன்னப்பதை கடுதாசி மடல் கொடுத்து உங்களை குற்ற உணர்வில் இருந்து விடுவிக்கும் நோக்கை நீங்க புரிந்து கொள்வீர்கள்


sankar
ஜூன் 18, 2025 19:58

நான் மன்னிப்பு கேட்டு பின்னால் ஒரு காலத்தில் இவ்வளவு சிறப்பான நடிகரை தடை செய்து விட்டோமே என்று நீங்கள் வருந்தி மன்னிப்பு கேட்கும் நிலை கன்னடர்களுக்கு வர கூடாது என்று நினைத்தால் இல்லை தோன்றியதால் இல்லை சிறிய எண்ணம் உருவாகியதால் மன்னிப்பு பிரச்னையை விட்டு விடுங்கள் அல்லது தயவு செய்து வேறு விஷயம் பேசுவோம் என்று இரு கரம் தூக்கி கட்டளை என்று நினைக்காமல் அபிராமி அபிராமி ...


நிக்கோல்தாம்சன்
ஜூன் 04, 2025 21:26

அட போய்யா நீ பேசியது உமக்கே புரியாம போச்சா ?


நிக்கோல்தாம்சன்
ஜூன் 07, 2025 17:46

இன்டி கூட்டணியில் மற்றொரு நொண்டி


Matt P
ஜூன் 04, 2025 12:00

கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தே ஓன்று பலவஆகிடினும் ஆரியம் போல சிதையா உன் சீரிளமை திறன் வியந்து வாழ்த்துதுமே என்கிறார் மனோன்மணியம் சுந்தரம். கேரளாவில் இருந்து எழுதியுமே எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார். மலையாளிகள் தமிழில் இருந்து தான் மலையாளம் வந்தது என்றால் பெருமை பட்டு கொள்கிறார்கள். உண்மை என்னவோ கசக்கிறது கன்னடர்களுக்கு. சிங்களமே 5 இந்திய மொழிகள் கலந்த ஒரு கலப்பு தானாம். சோமாலியா மொழி கூட 5 பல மொழிகள் கலந்து உருவானது தானாம். இந்தியும் இதில் அடக்கம். இங்கிலிஷ்ஏ உலகத்தின் பல மொழி வார்த்தைகளை ஏற்று கொண்டு தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஸ்பெல்லிங் பீ நிகழ்ச்சியில் கூட வார்த்தைகளை சொல்லும்போது எந்த மொழிலிருந்து வந்தது என்று சொல்வார்கள். ஏற்று கொள்ளாமையும் பிரிவினை எண்ணமும் தான் இந்திய வளர்ச்சிக்கு தடையே. இருந்தாலும் கமலஹாசனுக்கு குசும்பு தான்.


ப.சாமி
ஜூன் 04, 2025 08:28

உன் பேச்சே புரியாது.இதில் எவ்வாறு தவறாக புரிந்து கொள்ள முடியும் ?


M Ramachandran
ஜூன் 03, 2025 23:36

இவர் என்றைக்கு மானமிழந்து ஒரு ராஜ்ய சபா MP. க்கு கையேந்தி கட்சியை அடமானம் வைத்தாரோ அன்றே இவர் திருட்டு தீ மு கவிற்கு அடிமை.சரியான சினிமா நடிகன்.நன்றி???


Matt P
ஜூன் 03, 2025 22:21

பொழைப்புக்காக பின் வாங்கி விட்டார்


Annamalai Sadiyappan
ஜூன் 03, 2025 20:53

முதலில் கன்னடம் இருந்தது. அப்புறம் கடவுளைப் பிறப்பித்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை