உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வருடன் கரண் அதானி சந்திப்பு? 

துணை முதல்வருடன் கரண் அதானி சந்திப்பு? 

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய, அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.இது தவிர, தமிழகத்தில் மின் பயன்பாட்டை ஆளில்லாமல் கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம், வேலுாரில் நீரேற்று மின் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்துார் விமான நிலைய திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த, அதானி குழுமம் ஆர்வம் காட்டுகிறது.இந்நிலையில், அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் மகனும், அதானி போர்ட்ஸ் அண்டு எஸ்.இ.இசட்., நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான கரண் அதானி, துணை முதல்வர் உதயநிதியை சென்னையில் நேற்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சந்திப்பு, துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நடந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.முன்னதாக, கரண் அதானி தன் எக்ஸ் பக்கத்தில், 'உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கு வாழ்த்து தெரிவித்தும், அவருடைய நிர்வாகத்தில் தமிழகம் சிறப்புறும்' என்றும் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani . V
அக் 06, 2024 06:56

நாட்டை நிர்மூலமாக்கும் திட்டங்களை செயல்படுத்தும் சந்திப்பு.


M Ramachandran
அக் 05, 2024 20:21

யேனாப்பா வீண் வம்பு


Sridhar
அக் 05, 2024 13:52

ரெண்டு பேருல யாரு பெரிய பணக்காரன்னு விவாதம் நடந்திருக்கும். பாக்கப்போனா, அதானியெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா ஷேர் மார்கெட்டு. மொத்தமும் க்ளோஸ். ஆனா நம்மாளு மேட்டரு அப்படியா, எல்லாம் ஹார்ட் கேஷ் இப்போ க்ரிப்டோவாகூட இருக்கலாம். இவனுக அப்பப்போ வெளிநாடுகளுக்கு போயிட்டு வர்றதே இந்த விவகாரத்துக்குத்தானே


கல்யாணராமன் சு.
அக் 05, 2024 15:04

அவரும் கிரிப்டோ , அவரோட காசும் கிரிப்டோ அப்படிங்கறீங்களா ??


Rasheel
அக் 05, 2024 12:34

பொது ஜனம் தான் முட்டாளுங்க. கல்லா கட்டரவனுங்க காட்டில யோகமோ யோகம். ராகுல் காந்தி பார்லிமென்ட் கூச்சல் எல்லாமே பொய்யா


Ramesh Sargam
அக் 05, 2024 12:16

தமிழகத்தில் தொழில் துவங்க துணை முதல்வருக்கு தட்சிணை ஏதாவது கொடுக்கப்பட்டதா? எவ்வளவு?


RAMAKRISHNAN NATESAN
அக் 05, 2024 11:16

பாஜக-அதானி-திமுக ..... ஒரே நேர்கோட்டில் வந்தாச்சா ???? ம்ம்ம்ம் ..... மறக்காம எல்லோரும் போயி புள்ளகுட்டிகளை படிக்க வைங்க ......


sankaranarayanan
அக் 05, 2024 09:16

அதானி குடும்பத்தில் அம்பாணி குடும்பத்தில் டாடா குடும்பத்தில் மகேந்திர குடும்பத்தில் இன்னும் பல கார்போரேட்டுகளின் குழுவில் துணை முதல்வரும் ஐக்கியமாகிவிட்டார் என்னே முன்னேற்றம் இது திராவிட முன்னற்றம் அல்ல துணை முதல்வரின் முன்னற்றம்


VENKATASUBRAMANIAN
அக் 05, 2024 08:02

சரவணன் தமிழன் பிரசன்னா மேலும் திமுக உபிஸ் முகத்தை எங்கே வைத்துக்கொள்ள போகிறார்கள். எதெற்கெடுத்தாலும் அம்பானி அதானி என்று கூறவும் பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உள்ளவர்கள் என்ன செய்ய போகிறார்கள்.


கல்யாணராமன் சு.
அக் 05, 2024 15:00

நீங்க சொன்ன அந்த உபி கூட்டத்திலே ராகுல் காந்தியையும் சேர்த்துக்குங்க ....


S. Gopalakrishnan
அக் 05, 2024 08:02

மருமகனையும் சந்திக்கவும்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 05, 2024 06:58

40% கமிஷன் என்று கேள்வி.


Indian
அக் 05, 2024 09:34

ஆதாரம் இல்லாமல் அவதூறுப்பரப்புபவன் மீது வழக்கு பாயும் .


கல்யாணராமன் சு.
அக் 05, 2024 15:07

"ஆதாரம் இல்லாமல் அவதூறுப்பரப்புபவன் மீது வழக்கு பாயும் ." .......... உங்க விடியல் நாட்டிலே ஆதாரம் இருந்து பரப்பினாலும் வழக்கு பாயுது .... தும்மினாலே குண்டர் சட்டம் போடற தத்திகளின் அரசு இது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை