கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகி நீக்கம்
சென்னை, : கரூர் மாவட்ட அ.தி.மு.க., விவசாயப் பிரிவு செயலர் பாலமுருகன், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: கரூர் மாவட்ட அ.தி.மு.க., விவசாயப் பிரிவு செயலர் பாலமுருகன், கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார். இந்த காரணத்தினால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும், அவர் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.