உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவுக்கு ஐகோர்ட் கண்டனம்: கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு

தவெகவுக்கு ஐகோர்ட் கண்டனம்: கரூர் சம்பவம் பற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு

சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fgn8bupt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உத்தரவு

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது: சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக்கூடாது. என்ன மாதிரியான கட்சி இது. தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை.

விஜய் மீது கருணை

கட்சித் தலைவர் விஜய் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி சென்று விட்டார். வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது அவரது மன நிலையை காட்டுவதாக உள்ளது. சூழ்நிலை முற்றிலும் தவறாக கையாளப்பட்டுள்ளது. மாநில அரசு விஜய் மீது கருணை காட்டுகிறது. இவ்வாறு நீதிபதி கூறினார். நிகழ்ச்சியின் அமைப்பாளராக எந்தவிதமான பொறுப்பும் இல்லையா என்று தவெகவினரை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசாரிடமும் இதே கேள்வியை நீதிபதி எழுப்பினார்.

பேரழிவு

நீதிபதி மேலும் கூறுகையில், ''மனிதர்களால் மிகப்பெரும் பேரழிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தன்னுடைய பொறுப்புகளை கைவிட்டு நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. கூட்ட நெரிசலானது கட்சியின் தொண்டர்களால் தொண்டர்களின் நடத்தையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சித் தலைவர்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளனர். '' நடந்த சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டுள்ளது. தவெக பஸ் அடியில் இரு சக்கர வாகனங்கள் சிக்கியதை பார்த்த பிறகும், அதன் டிரைவர் நிறுத்தாமல் ஓட்டிச் செல்கிறார். இது மோதிவிட்டு நிற்காமல் செல்வதை போன்றது அல்லவா? ஏன் மோதிவிட்டு நிற்காமல் சென்ற பஸ் மீது வழக்குப்பதியவில்லை. போலீசார் அதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை,'' என தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜூனா மீது என்ன நடவடிக்கை

விசாரணையின் போது சமூக வலைதளத்தில் ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு சென்னை ஐகோர்ட் நீதிபதியிடம் காட்டப்பட்டதுஅப்போது நீதிபதி கூறுகையில், புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார்.இதற்கு பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல் பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் பார்த்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. தேவையான போது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு சின்ன வார்த்தை கூட பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடும். இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நீங்கள் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

joe
அக் 04, 2025 14:52

குறுகலான இடத்தில் ரோடு சோ வருமாறும் அனுமதி கொடுத்த மாநில அரசே இந்த சம்பவத்துக்கு காரணம்.முக்கியமான இடமான நகரின் மைய பகுதியில் ஜெயலலிதா அவர்களுக்கு அப்போது அனுமதி கொடுத்தார்கள் .விஜய்க்கு அதுபோல கொடுக்கக்கூடாது என்று திட்டம் போட்டு ,மக்களுக்கு இடைஞ்சலாக உள்ள இடமாக பார்த்து அந்த இடத்தில் அனுமதி கொடுக்கப்பட்டதே இந்த சம்பவத்துக்கு கரணம் . இதற்கு உள்ளூர் அரசியல் வாதிகள் ஐடியா கொடுத்திருக்கிறார்கள் .யார் அந்த உள்ளூர் அரசியல்வாதி என்றால் அது சிறை சென்று வந்த செந்தில்பாலாஜியாகத்தான் இருக்கும் .அதனால்தான் அடிக்கடி வார்த்தையை செந்தில்பாலாஜி மாற்றி மாற்றி பேசுகிறார் . இதை வடக்கு மண்டல I G அவர்கள் உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .உங்கள் துறையான கரூர் காவல் துறையினரும் அந்த இடம் குறுகலானது என்று விழிப்புணர்வு கொள்ளாததும் தவறுதான்.உங்கள் காவல்துறை மீதும் தவறுகள் உள்ளது . . மக்கள் உடனே வெளியூருக்கு செல்லும்படி கட்சியின் கூட்டம் அமைந்திருக்கவேண்டும் .தவறான இடத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டு தா .வெ .க .மீதும் விஜய் மீதும் குற்றம் சமத்துவத்தை ஏற்கமுடியாது .


SVR
அக் 03, 2025 22:45

மெட்ராஸ் ஹை கோர்ட் சரியாக சொல்லியிருக்கிறது. ஆங்கிலத்தில் ஹிட் அண்ட் ரன் என்று ஓன்று உண்டு. அது மாதிரி இந்த சினிமாக்காரர் சம்பவ இடத்திலிருந்து ஓடி விட்டார். அதைதான் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் புவர் குவாலிட்டி தலைவர் என்றும் கூறி விட்டார்கள். அதே சமயம் காவல் துறையையும் சாடி இருக்கிறார்கள். இதெல்லாம் சினிமாக்காரரின் அனுபவமின்மையை காட்டியிருக்கிறது. இவரெல்லாம் நாட்டை ஆண்ட மாதிரித்தான். இது என்ன செட்டா? நிஜமான மனிதர்கள் செய்திருக்கிறார்கள். கொஞ்சம்கூட அறிவேயில்லை.அக்கலவ் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். ரொம்ப யோசித்து ஓட்டு போடுங்கள்.


R. SUKUMAR CHEZHIAN
அக் 03, 2025 22:02

திராவிட மற்றும் கழக பெயர் கொண்ட கூட்டங்கள் தமிழகத்தின் சாபகேடுகள் இவைகளை ஒழித்து கட்ட வேண்டும். நீதிபதி கூறியதை புத்தி உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். தலைமை பண்பு இல்லாத தலைவர், பிரச்சனை வந்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிசென்றது, விமான நிலையத்தில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு நடந்த துயர சம்பவதிற்கு வருத்தம் கூட தெரிவிக்காதது, கட்டுபாடு இல்லாத ஒழுங்கீனமாக தொண்டர்கள் கூட்டத்தினால் 41 அப்பாவி உயிர்கள் பதறிப்போனது. அர்சுனா என்கிற நபர் இலங்கை, வங்கதேசம் நேபாளம் போல புரட்சி வெடிக்கும் என கலவரத்தை தூண்டும் விதத்தில் பதிவு போட்டது என அடுக்கடுக்கான கேள்விகள் யோசிக்க வைக்கிறது. நடிகர் விஜய் கட்சியை தடை செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது. நடிகர் விஜய்க்கு பாஜக உதவக் கூடாது அவர்கள் செய்த குற்றத்தை சுட்டி காட்ட வேண்டும் அனைத்து கட்சிகளும்.


Field Marshal
அக் 03, 2025 20:29

ரூபாய் நோட்டுக்கள் எரிந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துபேய் இன்னமும் தண்டிக்கப்படவில்லை ..நீதிமானாக தொடர்கிறார்


Barakat Ali
அக் 03, 2025 20:16

நீதிமன்றத்தின் கண்டணத்தைப் பார்த்தால் காவல்துறை மீது மதிப்பு அகன்றுவிடுகிறது .... பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற அணுகுமுறையைக் காவல்துறை கையாண்டுள்ளது ....


joe
அக் 03, 2025 20:14

இந்த சம்பவம் பற்றியதான செந்தில் பாலாஜியின் கருத்துக்களையும் அவர்மீதும் சரியான நடவடிக்கை வடக்கு மண்டல I G சரியான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் . ஜெயிலுக்கு சென்று வந்த பொருளாதார குற்றவாளியான இவருக்கு கரூரில் அனைத்து பகுதிகளும் தெரியும் .எனவே இவர் கூறிய கருத்துக்களையும் இவர்மீதும் நடவடிக்கை தேவை .இது போன்ற ஊழல் அரசியல் வாதிகளே சம்பவத்துக்கு காரணம் .இது பற்றிய வடக்கு மண்டல I G சரியான விசாரணை மேற்கொள்ளவேண்டும்


Barakat Ali
அக் 03, 2025 20:14

மாநில அரசு விஜய் மீது கரிசனம் காட்டுவதன் காரணம் அவர் திமுகவுக்காக வேலை செய்கிறார் ... எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கிறார் என்பதுதான் ....


joe
அக் 03, 2025 20:00

ஆரம்பத்திலிருந்தே தி மு க ஊழல் வாதிகளுக்கு சப்போர்ட் செய்கிறது .இதை விட்டு விட்டு புதிய கட்சியான தா. வெ. க .மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல . விசாரணை I G இதை சரியாக புரிந்து செயல்படவேண்டும் . தி மு க இல் ஏற்கெனவே ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் .சரியான விசாரணையாக இருக்கவேண்டும் .அதே சமயம் த .வெ .க ஒரு அனுபவம் இல்லாத புதிய கட்சி என்பதையும் நினைவில் கொள்ளவும் .


joe
அக் 03, 2025 19:52

கரூர் பகுதியில் உள்ள தி மு க அரசியல்வாதிகளை சரியாக விசாரணை நடத்தி வடக்கு மண்டல I G உண்மையான நடவடிக்கை எடுக்கவேண்டும் .


joe
அக் 03, 2025 19:48

1,. தமிழக துணை முதல்வர் உதய நிதி இந்து மதத்தின் ஒரு பகுதியான சனாதன கருத்துக்களை அவமதித்து தெரிவித்த கருத்துக்களுக்கும் சனாதனம் பற்றி அவதூறு பரப்பியும் பேசினார் . அவர் மீது நடவடிக்கை எடுக்க முக்கியமான 100நபர்களுக்குமேல் சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுத்தும் சுப்ரீம் கோர்ட் இன்றுவரை உதயநிதி மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .சட்ட வல்லுனர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளார்கள் .நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் கவனம் கொள்ளாமல் உதயநிதி மேல் நடவடிக்கை எடுக்காமல் சுப்ரீம் கோர்ட்டே இது போன்ற செயல் முறையில் உள்ளது . 2,.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்திற்கு நவம்பர் 2024இல் 66பேர் பலியாகினர் . தற்சமயம் கரூரில் 41பேர் பலியாகி இருக்கிறார்கள் .நீதி துறை அரசியல் வாதிகளுக்கு ஒரு சட்டம் மற்ற பொது மக்களுக்கு என்று பிற்போக்கான சட்டம் என்றே செயல்பாடாகவே இருப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் நல்லதல்ல . நீதி துறையும் ஊழல் அரசியல் வாதிகளையே காப்பாற்றுகிறது .ஏனென்றால் அரசியல் வாதிகள்தானே சம்பளம் தருகிறார்கள் .தி மு க என்பதே பெரிய ஊழல் கட்சி .பொருளாதார குற்றவாளிகளுக்கு ஆதரவு தந்து ஊழலே கட்சிக்கு சொத்து சேர்க்கும் என்று தி மு க ஒரு தேச துரோக கட்சியாகவே வளர்கிறது .அரசு அதிகாரிகளும் நீதித்துறையும் அவர்களுக்கு பாடம் கற்பிக்காமல் பாதுகாப்பது நல்லதல்ல . 3,. தற்சமயம் கரூரில் நடந்த நடவடிக்கைக்களுக்கு ஆட்சியாளர்களே முக்கிய பொறுப்பேற்காமல் த .வெ .க மீது பலி சுமத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல . பொருளாதார குற்றவாளி செந்தில் பாலாஜி இதுசம்பந்தமாக சொல்லிய கருத்துக்களும் சரியானதல்ல .அவர்மீதும் வடக்கு மண்டல I G வழக்கு பதிந்து நீதியை காப்பாற்றவேண்டும் .கரூரில் அனைத்து மூலை முடுக்கும் இந்த செந்தில் பாலாஜிக்கு தெரியும் .இந்த செந்தில் பாலாஜி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலும் இந்த செந்தில் பாலாஜி மீதும் விசாரணை நடத்தி வடக்கு மண்டல I G நீதியை காப்பாற்றவேண்டும் .இல்லாவிட்டால் நீதி நிலைக்காது என்றே அர்த்தமாகும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை