உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆய்வு மேற்கொண்ட பாஜ குழு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பாஜ உண்மை கண்டறியும் குழுவில் இடம் பெற்று இருந்த அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து சம்பவ இடத்தில் பாஜ எம்பி ஹேமமாலினி தலைமையிலான பாஜ உண்மை கண்டறியும் ஆய்வு செய்தது. இந்த குழுவினர், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் நேரில் சந்தித்து பேசினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e6ks9y0s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (அக் 03) இந்த குழுவில் இடம் பெற்று இருந்த அனுராக் தாக்கூர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தது.கரூர் மக்கள் ஆழ்ந்த வேதனையில் உள்ளனர், மேலும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அவர்களின் மனதில் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். இது தொடர்பாக அறிக்கையை அதிகாரிகள் சமர்பிக்க வேண்டும். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணங்கள் என்ன? நிகழ்விற்கு முன்னும், பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? ஆரம்ப விசாரணையின்படி, கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன? இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளைப் பற்றி பரிந்துரைத்து சமர்பிக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதேனும் காலக்கெடு வரையறுக்கப்பட்டுள்ளதா, அதனை பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். இந்த அவசர விஷயத்தில் சரியான நேரத்தில் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
அக் 03, 2025 20:38

இந்த குழு மணிப்பூர் பக்கம்.போகவே இல்லியே?


Narayanan Muthu
அக் 03, 2025 20:10

அதிகாரிகளின் அறிக்கை தேவை இல்லாத ஆணி. உயர்நீதிமன்றத்தின் கருத்து போதுமானது. இனியும் இதை வைத்து இந்த பொய்யறியும் குழு அரசியல் செய்ய முற்பட்டால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். மானம் மரியாதையாவது இவர்களுக்கு மிஞ்சட்டும்.


Narayanan Muthu
அக் 03, 2025 19:06

இவர்கள் ஆளும் மாநிலங்களில் நடந்த அசம்பாவிதங்களுக்கும் வன்முறைகளுக்கும் கொடூர சம்பவங்களுக்கும் இல்லாத நடைமுறை ஒன்றை இவர்களை அரங்கேற்றினால் இவர்கள் ஜோக்கர்கள்தான்


கனோஜ் ஆங்ரே
அக் 03, 2025 17:52

கரூர் சம்பவத்தில் ‘’இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.” அப்படீன்னு அனுராக் தாக்கூர் சொல்றாரு…? ………………. “மக்களை, குழந்தைகளை த.வெ.க நிர்வாகிகள் மீட்டிருக்க வேண்டும். இந்த இழப்பிற்கு முழுக்க முழுக்க த.வெ.க.வினரே பொறுப்பு.” அப்படீன்னு சென்னை உயர் நீதிமன்றம் சொல்றாரு…? யார் பேச்சை கேட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் நடக்கணும்.


Amar Akbar Antony
அக் 03, 2025 16:49

இந்தக்குழு தேவை தானா என்ற எண்ணம் இருந்தது. ஆழ்ந்து யோசித்தபோது - இந்த தமிழ்நாடு விடியாக்கட்சியின் எம் பி "மதுவினால் விதவைகள்" என்ற புகழ்பெற்ற கனிமொழி அவர்களுக்கும் அவர்கட்சியின் தலைவருக்கும் என்று "மணிப்பூரில்" அதீத கவணம் வந்ததே - அப்போ இந்த தேசிய கூட்டணிக்கும் தகுதி உண்டே குறை குற்றம் சொல்லமுடியுமுங்களா? கேள்விகேட்க்காம பதில் சொல்லுங்கோ.


சாமானியன்
அக் 03, 2025 16:01

உச்சநீதிமன்ற நீதிபதிகளும், பிரதமர் தலைமையிலான காபினெட்டும் ஒன்று சேர்ந்து அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆட்சி நடத்துபவர்களையும், ஆட்சியையும் ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்ய வழிமுறை வகுக்கவும். இந்த மாதிரி பெருங்கூட்டத்தில் கட்சிக்காரர்கள் மனித சங்கிலி அமைத்து மக்களை காப்பாற்றலாம்.


Indian
அக் 03, 2025 15:19

மொதல்ல பாதிக்க பட்ட மக்களுக்கு , ஆளுக்கு இருபது லச்சம் கொடுங்க , சும்மா இரண்டு லச்சம் கொடுத்து ஏமாத்த வேண்டாம் . பின்னர் கடிதத்திற்கு பதில் தரலாம் .


Barakat Ali
அக் 03, 2025 20:20

கையாளத்தெரியாத மாநில அரசின் தவறுக்கு மத்திய அரசு ஏன் நிதி தரவேண்டும் ????


Mohan V
அக் 03, 2025 15:19

கும்பமேளா நடந்த கூட்ட நெரிசல், இதுவரை நடந்த மோசமான நெரிசல் சம்பவங்கள் நடந்த பிறகு மத்திய மாநில அரசுகள் என்ன வழிமுறைகளை வகுத்து உள்ளார்கள். அரசியல் மட்டும் நோக்க மாக இருக்கிறது. கட்சி கூட்டங்களுக்கு லாரியில் ஆடு மாடுகளை போல அழைத்து போவது ஏன் இன்னும் மாற வில்லை. உயிர்களுக்கு என்ன மதிப்பு இத்திருநாட்டில்.


Mariadoss E
அக் 03, 2025 14:58

நீங்க யாரு சார்? உங்களுக்கு ஏன் சார் பதில் சொல்லணும்?


pakalavan
அக் 03, 2025 14:17

இங்க வந்து வியாக்கானம் பன்றானுங்க


சமீபத்திய செய்தி