உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு

சென்னை: அடுத்த 2 வாரங்களுக்கு விஜய் மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.கரூரில் விஜயின் தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சூழலில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களே நேரில் சந்திப்பேன் எனவும், மன வேதனையில் இருக்கிறேன் எனவும் விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rznw6jt3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று அடுத்த 2 வாரங்களுக்கு விஜய் மக்கள் சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கை: நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், விஜயின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

AMLA ASOKAN
அக் 02, 2025 09:18

விஜய் போன்ற மடையர்கள் ஆட்சிக்கு வந்தால், அவரது மரம் ஏறும் ரசிகர்கள் தான் அமைச்சர்களாக வருவார்கள். இது என்ன தமிழ் நாடா அல்லது தமிழ் காடா? எந்தவித அரசியல் அறிவு, நிர்வாக அனுபவம், மக்களுடன் இணக்கம், கட்சி கட்டுக்கோப்பு போன்ற திறமை எதுவும் இல்லாமல், தன் முகக் கவர்ச்சியை முதலீடாக வைத்து கொண்டு, தனது உயிரையும் மதிக்காத ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தை தன் பின் வைத்துக்கொண்டு அரசியலுக்கு வருவது அபாயகரமானது. இவர் கட்சியை களைத்து விட்டு அப்பா சாமி போதுமடா உன் கொடூரம்


Jay Al
அக் 02, 2025 07:24

கைதுக்கு பயந்து விஜய் ஒளிந்து கொண்டார்.


Mario
அக் 01, 2025 21:52

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லி பயணம்.. வழக்கு பாய்ந்த நிலையில் தனி விமானத்தில் திடீர் விசிட்


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 20:26

ரெண்டு வாரம் லீவு.


நரேந்திர பாரதி
அக் 01, 2025 19:42

தம்பி... வேணாம்


R. SUKUMAR CHEZHIAN
அக் 01, 2025 19:10

பொதுமக்கள் நடிகர் விஜய் மீது மிக கடுமையான அதிருப்தியில் உள்ளனர், தான் அரசியல் செய்வதற்கு கட்டுப்பாடு இல்லாத புத்திசாலிதனமாக யோசிக்க தெரியாத ரசிகர்களை மூலதனமாக வைத்து கட்சி கூட்டம் நடத்தி 41 அப்பாவி உயிர்களை பலிகொண்டு திரும்பவும் பொது இடத்திற்கு வந்தால் கடுமையான பின்விளை வுகள் ஏற்படும். இன்னும் கொஞ்ச நாட்களில் மக்கள் மறந்து போய் விடுவார்கள் அப்போது திரும்ப வந்து சினிமா வசனம் பேசி அரசியல் செய்யாமல் அதுவரை பொறுமையாக இருக்கவும்.


Haja Kuthubdeen
அக் 01, 2025 19:14

தமிழ்நாட்டில் எவரும் கூட்டம் போடலாம்..அதையெல்லாம் தடுக்க முடியாது.விஜய்னா உமக்கு ஏன் பயம்????


Haja Kuthubdeen
அக் 01, 2025 19:17

அந்த அப்பாவி பொதுமக்கள் எப்படி ஏன் இறந்தார்கள்..என்பதை கண்டு பிடிக்கத்தான் எதிர் கட்சிகளும் பொதுமக்களும் சிபிஐ விசாரனை வேணும்னு பேசி வராங்க....


M.Sam
அக் 01, 2025 19:00

உண்மையிலே நல்ல மனிதனாக இருந்தால் அரசியிலையை விட்டு விடு நீ யாரின் ஐ பாவாய் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது. யாரோ ஏத்தி விட்டத நம்பி அரசியல் களத்தில் வந்தது தப்பு .


Haja Kuthubdeen
அக் 01, 2025 19:22

அப்டியா....மற்றவனுங்கள போல அவரும் நல்லவர் இல்லதான்.அதுக்கென்ன இப்ப...அவர் நல்லவர்னு நினைக்கிறவங்க அவுருக்கு ஓட்டு போடுவாங்க...


PATTALI
அக் 01, 2025 17:55

இந்த நடக்ககூடாத துயர சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் என மூன்று தரப்பினருக்கும் சமஅளவில் பொறுப்பு இருக்கிறது. ஒருவரை ஒருவர் குறைகூறி ஒரு பயனும் இல்லை. மேற்கொண்டு இதுபோல் நடக்காமல் இருக்கவேண்டுமானால் மேற்கூறிய மூன்று தரப்பினரும் மிகுந்த கவனத்துடன் சுயகட்டுப்பாடோடு நடந்துகொள்ளவேண்டும்.


KRISHNAN R
அக் 01, 2025 17:21

இது வரை மற்ற கட்சிகள்... நல்லா.. உதவி செஞ்சிட்டாங்க... இப்போ நீ... ஒண்ணு பாக்கி.


MARUTHU PANDIAR
அக் 01, 2025 17:16

ஓரு சின்ன பையன் லுக்கு சூப்பர் மேக் அப்பு.


சமீபத்திய செய்தி