உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதா முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கோடநாடு எஸ்டேட்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம், 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீரபெருமாளிடம் விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி, வரும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராகும் படி, வீர பெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajan A
மார் 08, 2025 17:56

தேர்தல் வருது, கொடநாடு ஞாபகம் இருக்கிறதுனு சொல்றாங்க. அவர்தான் சைலண்ட்டா இருக்கிறாரே. இப்ப லெட்டர் பேடு கட்சி மாதிரி ஆக்கிட்டாரே.


M.COM.N.K.K.
மார் 08, 2025 12:17

இவ்வளவுகாலம் எங்கே போனது இந்த சம்மன்.வேடிக்கையாக உள்ளதே


Laddoo
மார் 08, 2025 11:13

பத்துத் தோல்விக்கு கத்தி தொங்குதே தலைக்கு மேலே தொங்குதே ஜெயாவோடு அதிமுகவும் மண்ணோடு மண்ணாகப் போகிறதே அண்ணாமலையார் மேலே பாரத்தைப் போடுங்க.


अपावी
மார் 08, 2025 10:44

ஹையா... முழிச்சிக்கிட்டாங்க... முழிச்சிக்கிட்டாங்க. நாலு வருஷமா தூங்குனவங்க... முழிச்சுக்கிட்டாங்க. எலக்‌ஷன் வருதோல்லியோ... தூசி தட்ட முழிச்சிக்கிட்டாங்க.


sundarsvpr
மார் 08, 2025 10:44

பெரும்புள்ளிகள் செய்திடும் தில்லுமுல்லுகள் கொலை கொள்ளை விசாரணைகள் ஆண்டுகளாக நடக்கின்றன. கடைசியில் உப்பு சப்புஇல்லாமல் முடிவுகள் வருகின்றன. ஏழை எளியமக்கள் என்ன பலன் அடையப்போகின்றனர். மக்கள் முற்றும் தினமலர் போன்ற தேசிய உணர்வுக்குள்ள பத்திரிகைகள் சந்தேகமான அரசியல்வாதிகளை கவனத்தில் கொண்டால் ஊழல்கள் நிகழ்வுகள் நிச்சியம் குறையும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை