உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றம்

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை முன்னேற்றம்

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் வி.எஸ். பாபு. செப்.9ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டார். பிறகு அவர் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (செப் 19) மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை சீராக உள்ளது; பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்கிறது. இவ்வாறு மருத்துவமனை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராமகிருஷ்ணன் பரமக்குடி
செப் 20, 2026 10:18

திமுகவினர் கொளத்தூரில் இடை தேர்தல் வந்துவிடும் என்றும் ஸ்டாலின் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை வந்து விடும் என்றும் மக்களை பயமுறுத்தி வருகின்றனர். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்


manituticorin
செப் 19, 2026 22:13

இப்படித்தானய்யா மொதல்ல அறிக்கைவிடுவாங்க.. அப்பால தான் ..... என்னத்த சொல்ல...


Bhaskaran
செப் 19, 2026 18:44

திமுக ........


mani vannan
செப் 19, 2026 18:23

அரசு மருத்துவமனையில் ஏன் சேர்க்கப்படவில்லை.


Sundhararajan Krishnan
செப் 19, 2026 17:23

I pray for his speedy recovery to good heaith


SUBRAMANIAN P
செப் 19, 2026 16:56

10 வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான் தொடர்ந்து செய்தி வந்தது. கடைசியில் இடியை இறக்கினார்கள். ஆசுபத்திரியை நம்பமுடியாது. MGM யார் ஆளுன்னு முதலில் செக் பண்ணனும்.


புதியவன்
செப் 19, 2026 16:11

இட்லி சாப்பிட்டாரா இல்லையா?


V Venkatachalam, Chennai-87
செப் 19, 2026 15:44

வி எஸ் பாபு நலமடைய பிரார்த்திக்கிறேன்.


ஆரூர் ரங்
செப் 19, 2026 15:34

இடைத்தேர்தல்கள் நடக்கும் நேரத்தில் இப்படி இன்னொரு அதிர்ச்சி.


SV
செப் 19, 2026 15:01

இது ஜெ இருந்தப்ப வந்தது மாதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை