உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

கடல் நோக்கி பாயும் காவிரி உபரி நீரை காய்ந்த ஏரிகளுக்கு திருப்பி விடுங்க: கண்ணீருடன் காத்திருக்கும் விவசாயிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில், காவிரி ஆற்றின் உபரி நீர் கடலில் சென்று வீணாகிறது. 'அதை காய்ந்த ஏரி, குளங்களுக்கு திருப்பி விட்டால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும்; விவசாயமும் செழிக்கும்' என்கின்றனர், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.ஜூன், ஜூலை பிறந்தாலே டெல்டா மாவட்டங்களில் ஒலிக்கும் ஒரே குரல், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வீணாகிறது என்பது தான். கரை புரண்டு காவிரியில் தண்ணீர் ஒடினாலும், கடைமடையில் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் தண்ணீர் வறண்டு கிடக்கின்றன என்பது வேதனை அளிக்கும் உண்மையாக இருக்கிறது. இந்த நிலைக்கு தீர்வு காண, கடலில் கலக்கும் நீரை, விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என்பது கோரிக்கை.கர்நாடக, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. அணையின் முழு கொள்அளவு 120 அடி. அதற்கு மேல் உபரியாக வரும் தண்ணீரை அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடுகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர், மேலணை (முக்கொம்பு), கல்லணை, கீழ்ணை (அணைக்கரை) மூலம், பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில், முக்கொம்பில் காவிரி ஆறு இரண்டாக காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் என நான்கு ஆறுகளாக பிரிகிறது. இதில் காவிரி, வெண்ணாறு ஆறுகளில் மட்டுமே 36 ஆறுகள் பிரிந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை வளப்படுத்துகின்றன. இதன் மூலம் 15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கல்லணை கால்வாய் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஏரிகள் எத்தனைகாவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 764 ஏரிகள் மற்றும் குளங்கள் நீர்வளத்துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. இதில், கல்லணை கால்வாயின் கீழ் மட்டும் 600 ஏரிகள் உள்ளன. அத்துடன் கரூர் மாவட்டம் மாயனுார் அணையில் இருந்து பிரியும் கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யங்கொண்டான் வாய்க்கால் மூலம் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, பூதலுார் பகுதியிலும், திருச்சி, கரூர் மாவட்டங்களிலும் நுாற்றுக்கணக்கான ஏரிகள் தண்ணீர் பெறும் வசதி உள்ளது.அற்புத நீர் மேலாண்மைகாவிரியில் வரும் தண்ணீரானது, கல்லணை மூலம் டெல்டா மாவட்டங்களில், 11 ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்திற்கு வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.பழங்கால மன்னர்கள் ஏற்படுத்திய இத்தகையை அற்புத நீர் மேலாண்மையை, விவசாயிகளும், அரசாங்கமும் முறையாக பராமரிக்க தவறியதின் விளைவு தான். வீணாக கடலில் உபரி நீர் கலக்கிறது. இதை தடுத்து, காய்ந்து போன ஏரி, குளங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றபடுகிறது. முக்கொம்பில் இருந்து 37,389 கன.அடியும், கல்லணையில் இருந்து 3,718 கன அடியும் நீர் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீராக செல்கிறது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆறுகளில் தண்ணீர் முழுமையாக திறக்கப்பட்டதால் கடைமடை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வறண்ட ஏரிகள்அதே சமயம் கடைமடை மாவட்டங்களில் ஏரி, குளங்கள் அனைத்தும் இன்னும் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் கீழ் உள்ள 85 ஏரிகள் வறண்டு கிடப்பதாக விவசாயிகள் சமீபத்தில் போராட்டத்தில் குதித்தனர்.

தடுப்பணை

திருச்சி முக்கொம்பு முதல் மயிலாடுதுறை பழையறை வரை 150 கிலோ மீட்டர் பயணிக்கும் கொள்ளிடம் ஆறு, பல லட்சம் ஏக்கர் விவசாயமும், கூட்டு குடிநீர் திட்டத்திற்கான அடிதளமாகவும் உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட முடியும்.அதன் மூலம் ஆங்காங்கே உள்ள ஏரி குளங்களும் நிரம்பும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதனை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசுகள் கண்டுக்கொள்ளுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளை விவசாயிகள் கூறி வருகின்றனர்.

ஏரி, குளங்கள்

கல்லணை கால்வாய் மூலம் சுமார் 600க்கும் மேற்பட்ட ஏரி,குளங்களில் தண்ணீரை சேமிக்க முடியும் என விவசாயிகள் கூறினாலும், மழை காலங்களில் வெள்ளம் ஏற்படும் என்கிற காரணத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறி அதை தட்டிக்கழிக்கின்றனர்.இதனால் ஆண்டுக்கு 8 மாதங்கள் ஏரிகள், குளங்கள் வறண்டு தான் காட்சியளிக்கிறது. ஏரிகளுக்கு வரும் நீர்வழிபாதையும் மறைந்து போகி விட்டது என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.இதற்கு தீர்வு காண, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீணாகி கடலில் கலக்கும் தண்ணீரை உரிய முறையில் பயன்படுத்தும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Jayaraman R
ஜூலை 13, 2025 18:55

வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தி தமிழக வறட்சி பகுதிகளில் காவிரி நீரை பயன்படுத்தலாம்.


Jayaraman R
ஜூலை 13, 2025 18:53

வளர்ச்சி திட்டங்களுக்கு , ஏரிகள், குளங்கள், ஆகியவற்றிற்கு காவிரி ஆற்றின் நீரை எடுத்து செல்ல வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தி தமிழகத்தை வளப்படுத்த வேண்டும்.


Tweeters Tweeters
ஜூலை 08, 2025 20:54

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.ஆனால் அணையிலிருந்து தண்ணீர் சுமார் 50 கிமீ தூரம் உள்ள பவானி கூடுதுறையில் கலக்கிறது. கொடுமை என்னவென்றால் இந்த 50 கிமீ காவிரி ஆற்றிலிருந்து இருபுறமும் உள்ள குறிப்பாக ஆற்றின் மேற்கு பகுதியில் உள்ள 2 கிமீ அப்பால் உள்ள விவசாய நிலங்கள், ஏரி , குளம், அனைத்தும் வறண்ட பாலைவனமாக உள்ளது. இந்த பகுதியில் அதற்கான தகுதிவாய்ந்த அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லாததே காரணம். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை மட்டுமே இப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்வது தான் மிச்சம்.


Palanisamy T
ஜூலை 07, 2025 22:56

1. உபரிநீர் கடலில் சென்று வீணாகிவிடு கின்றதென்று மட்டும் சொல்லவேண்டாம் . இதன் பின்விளைவு நாளடைவில் கடலின் உப்புநீரின் தன்மையளவும் உயர்ந்து கடலும் பாதிக்கப்படும். கடல்வாழ் வளங்களும் உயிரினங்களும் அழியும். மீன்வளங்களும் மீனவர்களும் நாளடைவில் பாதிக்கப்படுவார்கள். அதைச் சார்ந்துள்ள நிலமும் பாதிக்கப் படும். இப்படி செய்வது இயற்கைக்கு மாறானச் செயல். 2. காய்ந்த ஏரிகளுக்கும் குளங்களுக்கும் நீரை திருப்பி விடுங்களென்று கோருவதும் நியாயம். இதை அரசுமட்டும்தாம் சரிசெய்யமுடியும் செய்யவும் வேண்டும் . மற்றபடி வீணாகும் உபரிநீரை தேக்கிவைக்க நாங்கள் இரண்டாவது அணையை கட்டுவோ மென்று கர்நாடகா சொல்வதை தமிழகம் ஏற்கக் கூடாது. அப்படி அவர்கள் செய்தால் அது தமிழகத்திற்கு எதிரானச் செயல்மட்டு மில்லை, காலம் காலமாக இயற்க்கையாக ஓடிக் கொண்டிருந்த காவேரி நீரை தடுத்ததும் தவறாகிவிடும். மேலும் இதுவும் இயற்கைக்கு மாறான எதிரான செயலும் கூட. அரசு இவ்விரண்டையும் கருத்தில் கொள்ளவேண்டும்.


sridhar
ஜூலை 07, 2025 18:47

டெல்டா முழுவதும் திமுகவுக்கு தானே வளைச்சி வளச்சி குத்தினீங்க , அனுபவிங்க .


Kumar Kumzi
ஜூலை 07, 2025 17:37

ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் ஓசி கோழி பிரியாணிக்கும் இப்போது புலம்புவதால் என்ன பயன் மக்கள் பிரச்சினையை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிக்கு ஓட்டு போடுங்கடா


D Natarajan
ஜூலை 07, 2025 16:31

விடியல் டாஸ்மாக்கில் தான் தண்ணீர் விடுவார். உபரி நீரை சேமிக்க விடியலுக்கு நேரமில்லை. வோட்டு போட்டீர்கள் அல்லவா , அவதிப்படுங்கள். 2026ல் வோட்டை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். விலை போகாதீர்கள்


D Natarajan
ஜூலை 07, 2025 16:31

விடியல் டாஸ்மாக்கில் தான் தண்ணீர் விடுவார். உபரி நீரை சேமிக்க விடியலுக்கு நேரமில்லை. வோட்டு போட்டீர்கள் அல்லவா , அவதிப்படுங்கள். 2026ல் வோட்டை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். விலை போகாதீர்கள்


Chinnaraja
ஜூலை 07, 2025 16:17

தடுப்பனை கட்டினால் மணல் கொள்ளையடிக்க முடியாது.இதன் அரசியல் வாதிகளின் என்னம்.


V RAMASWAMY
ஜூலை 07, 2025 14:55

அத்தைக்கு மீசை முளைத்தால் என்பது போல, மாடல் அரசு 2026ல் ஒருக்கால் அரசு அமைத்தால், இதனைப்பற்றி யோசிக்கும், அதில் ஏதாவது ஆதாயம் இருந்தால்.


முக்கிய வீடியோ