உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடு முழுதும் நிலச்சரிவு ஆபத்து; பகுதிகளை அறிவிப்பதில் தாமதம்

நாடு முழுதும் நிலச்சரிவு ஆபத்து; பகுதிகளை அறிவிப்பதில் தாமதம்

சென்னை: வயநாடு நிலச்சரிவு நடந்து ஓராண்டாகும் நிலையில், இனியும் தாமதிக்காமல், நாடு முழுதும் நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகள் விபரத்தை வெளியிடுமாறு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில், 2024 ஜூலை 30ம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழல் விதிகளை மீறி, மரங்களை வெட்டி கட்டடங்கள் கட்டப்பட்டதும், குவாரிகள் செயல்பட்டதுமே, நிலச்சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

ஆய்வு கமிட்டி

சுற்றுலா மேம்பாட்டுக்காக அரசு மேற்கொள்ளும் சாலை, மேம்பால பணிகளும் சூழலியலை அழிப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இதுதொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், 'வரும் காலங்களில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க, மாதவ் காட்கில், கஸ்துாரி ரங்கன் ஆகியோர் தலைமையில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. 'மேற்கு தொடர்ச்சி மலைகளை, நிலச்சரிவு அபாயம் உள்ள மூன்று சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக வகைப்படுத்த வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையின் மொத்த பரப்பில், 37 சதவீதத்தை சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கலாம்' என்று, கஸ்துாரி ரங்கன் கமிட்டி பரிந்துரைத்தது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:கடந்த மார்ச் 28ல் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், கேரள அரசும் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரியுள்ளார்.சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான இறுதி அறிவிப்பு, ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

நடவடிக்கை

வயநாடு நிலச்சரிவு நடந்து ஓராண்டு கடந்தும், நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளை அறிவிக்காதது கவலைக்குரியது. இதுதொடர்பாக, மாதவ் காட்கில் மற்றும் கஸ்துாரி ரங்கன் ஆகியோர், ஏற்கனவே விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளனர். அவர்களின் ஆய்வறிக்கையை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்கலாம். எனவே, அவசர நடவடிக்கை தேவைப்படும் மாநிலங்களில், நிலச்சரிவு ஆபத்துள்ள பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் இறுதி அறிவிப்பை வெளியிட, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தன் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, ஆகஸ்ட் 11ல் நடக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
ஜூன் 28, 2025 16:34

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. இது மத்திய பாஜக அரசின் கீழ் தானே உள்ளது, அப்படி என்றால் உருப்படியாக ஒன்றும் நடக்காது! மாநிலங்களை குறை கூறி விட்டு தப்பித்து விடுவார்கள்.


ஆரூர் ரங்
ஜூன் 28, 2025 10:51

மத வாக்கு அரசியலுக்காக காட்கில், கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கைகளை செயல்படுத்தாமல் குப்பையில் போட்டது நகர நக்சல் கட்டுப்பாட்டிலுள்ள உண்டியல் கட்சி அரசு. இதற்கு காங்கிரசும் துணை போனது. அதன் கெடுவிளைவாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆக இவர்களின் சுயநல தவறால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு பல்லாயிரம் கோடி நிவாரணம் கேட்கிறாங்க.


M Ramachandran
ஜூன் 28, 2025 10:41

கேரள மக்கள் இனியாவது திருந்து வார்களா? சுயநலமிகள் கம்யூனிஸ்ட்டுகள் காங்கரஸ் கூட்டு களவாணிகளால் 30% காடுகள் அழிளிக்க பட்டு விட்டன. அதன் தாக்கம் இப்போனது அப்பாவிமக்களையும் சேர்த்து வவாட்டி வதைத்து கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது. 50 வருடத்திற்கு முன்பேயே சபரிமலையை செல்லும் நடை பாதை களில் காடு களை அழித்து கம்யூனிஸ்டு சிந்தாதை பரப்பி மக்களை குடியமர்த்தி அவர்களுக்கு கேரள வாட்டர் போர்டுமூலம் கிணறுகள் ஏர் படுத்தி குடி அமர்த்தி கள்ளுக்கடைய்ய கழியும் திறந்து நாசா படுத்த ஆரம்பித்து இன்று பெரும் பகுதி காடுகள் மரங்கலிய்ய வெட்டி பணம் பார்த்து விட்டனர்.இன்றும் செங்கோட்டையிலிருந்து அச்சன் கோயில் செல்லும் பாதையில் வனத்தில் காடுகாலிய்ய அழித்து முஸ்லீம் மக்கலிய்ய குடி அமர்த்தி விவசாய நிலமாகமாற்றி கொண்டிருக்கிறார்கள் காலை 9:00மனிலு மேல் தான் வாகனஙகள் செல்ல கேரள காட்டி லாக்க அனுமதி . ஏன் என்றால் யானை கள்நடமாட்டம் 7:00 மணி வரைய்ய இருக்கும். சிலசமயம் கைய்யூட்டு கள் வாங்கி கொண்டும் முன்னேறத்தில் அனுமதிப்பார்கள்.


Manaimaran
ஜூன் 28, 2025 09:32

எனது ஊர் கோவை. எந்த புயல் பூகம்பம் எதுவும் கிட்ட வராது


Kannan
ஜூன் 28, 2025 07:09

எத்தனை முறை பட்டாலும், மாநில அரசுகள் கண்டு கொள்வதே இல்லை


புதிய வீடியோ