உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!

சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.துபாயில் இருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமான சென்னை விமான நிலையம் வந்தது. அப்போது, பரங்கிமலையில் இருந்து விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i0whs8y8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த விமானி, சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, விமானி அளித்த தகவலின் பேரில், லேசர் ஒளி பாய்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Kundalakesi
மே 26, 2025 17:33

எல்லாரும் துப்பறிவாளராக மாறியாச்சு. எவனோ வீனா போனவ செஞ்ச வேலை


M Ramachandran
மே 26, 2025 16:21

எத்தனையோர் முறை நடந்து போலீஸிடம் முறையிட்டும் ஒன்றும் நடக்க வில்லை. காவல் துறையை நிர்வகிப்பவர் கலையஞ்சர் வழி தோன்றல் என்று பீத்திக்கொள்ளும் திராவிட சித்தாந்த ??? சிகாமணி தான் துறை அமைச்சர். பலன் பூஜ்யம். காவல் துறை கேவலப்பட்டு நிற்கிறது.


Srinivasan Krishnamoorthi
மே 26, 2025 14:56

எல்லா மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலைய வாசல் சப்வே மற்றும் திருப்பதி பழனி அடிவாரம் மரீனா என சுற்றி சுற்றி லேசர் லைட் டார்ச் மற்றும் ஹை பீம் LED LONG RANGE FOCUS லைட்கள் விற்க படுகின்றன


Anantharaman Srinivasan
மே 26, 2025 14:37

ஒரு விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் விமானத்தின் மீது லேசர் ஓளி வீசுவதை விமானநிலையத்தில் கண்காணிக்க Provision கிடையாதா..? விமானி இறங்கி வந்தபின் சொன்னால் தான் தெரியுமா..?


Ramesh Sargam
மே 26, 2025 13:17

பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகளை அழிப்பதுபோல, உள்நாட்டு பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒழிக்கவேண்டும். அவர்களைவிட, இவர்கள் மிக மிக பயங்கரமானவர்கள்.


Krishnamurthy Venkatesan
மே 26, 2025 12:48

லேசர் டார்ச் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். கடை கடையாக சென்று பறிமுதல் செய்ய வேண்டும். இனி பவர் பாயிண்ட் presentation கொடுப்பவர்கள் வயர்லெஸ் mouse ஐ பயன்படுத்தல் வேண்டும்


Raghavan
மே 26, 2025 12:20

இது ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பதுபோல் உள்ளது. யாரோ கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம். அதிலயும் இந்த விமானம் துபாயில் இருந்து வருகிறது. கஸ்டம்ஸ் அதிகாரிகளை சரிகட்டி விட்டோம் நீங்கள் கவலைப்படாமல் இறங்கலாம் என்பதற்கு பச்சை ஒளி சிக்னல் செய்கிறார்கள் போல் தெரிகிறது. தீர விஜாரனை செய்தால்தான் உண்மை தெரியவரும். தீவிரவாதம் போல் தெரியவில்லை ஆனால் தங்கம், போதை பொருள் கடத்தலுக்காக கூட இருக்கலாம்.


SIVA SAILAM
மே 27, 2025 12:56

erukkalam


Kanns
மே 26, 2025 12:12

Must be Terrorist Planning. Intensify Investigations & Root Out Terrorists Without Any Mercy. Sack Police Not Cooperating With NIA& ATS


venugopal s
மே 26, 2025 10:48

அப்பாடா, அவ்வப்போது இப்படி கொஞ்சம் ....


Svs Yaadum oore
மே 26, 2025 09:56

இந்த சம்பவம் முதல் முறை கிடையாது.. இதற்கு முன்பும் இதே போல் நடந்துள்ளது. பிறகு விமான நிலையம் சுற்றி லேசர் தடை செய்து செய்தி வெளியானது. இந்த சக்தி வாய்ந்த லேசர் பல கிலோ மீட்டர் தூரம் வெகு தூரத்திற்கு செல்லும்.. இதை இங்கு விற்க அனுமதி உண்டா என்பதும் தெரியாது. விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு போலீஸ் என்று எதற்கும் மரியாதை கிடையாது. சட்ட விரோத செயல் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை