உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அக்.1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் அமல்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அக்.1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் அமல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்.1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா தொற்று காலத்தில், நிதி சுமை காரணமாக அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நடைமுறையை 2026 ஏப்.1 முதல் செயல்படுத்த 2025-26 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.கடந்த ஏப்ரலில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந் நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு இருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்.1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறுவர். தமிழக அரசின் ஈட்டிய விடுப்பு சரண் அறிவிப்பை செயல்படுத்துவதன் மூலம், கூடுதலாக ரூ.3,561 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ragupathy
ஜூலை 05, 2025 08:50

99சதவீதம் அரசு ஊழியர்கள் திருடர்கள்...லஞ்சப் பேர் வழியா இருக்கானுங்க....எல்லாரையும் துரத்திட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து அவர்களை நேர்மையான வேலைசெய்ய வைக்க வேண்டும்...


kumar
ஜூலை 04, 2025 20:21

no momey only eye wash . please pay all retireed people funds.


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2025 19:51

கஜானா காலி.


ASIATIC RAMESH
ஜூலை 04, 2025 19:21

தேர்தல் நெருங்க நெருங்க அரசு ஊழியர்கள் இன்னும் அதிகம் எதிர்பார்க்கலாம்.... தேர்தலுக்கு 4 மாதம் முன்னாள் கண்டிப்பாக கிடைக்கும். அப்போது அரசு ஊழியர் சங்கங்கள் அரசுக்கு போடும் ஜால்றாவே வேற.....


முக்கிய வீடியோ