உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை

முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை

சென்னை: ''முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை, அப்புறம் பார்க்கலாம்,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.அவர் அளித்த பேட்டி: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாற்றுக்கட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம்' என, பா.ஜ.,வினர் கூறினர். ஆனால், பா.ஜ., ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன், அமலாக்கத் துறை சோதனை நடக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cbpxhf2k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 10 ஆண்டுகளாக, மாற்றுக்கட்சிகளின் ஆட்சிக்கு தொல்லை தந்து வருகிறது மத்திய அரசு. அமலாக்கத் துறையை கேடயமாக, பா.ஜ., பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி, பா.ஜ., அரசு பழிவாங்குகிறது.

யோக்கியர்கள் அல்ல

அமலாக்கத் துறை அச்சுறுத்தலால், பா.ஜ.,வில் சேருவோர் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன. மாற்றுக்கட்சியில் இருந்தபோது, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு ஆளானவர்கள், பா.ஜ.,வில் சேர்ந்ததும் வழக்கு முடிக்கப்படுகிறது. ஊழல் செய்தவர்கள் பா.ஜ.,வில் இணைந்ததும் புனிதர்களாகி விடுகின்றனர்.அமலாக்கத் துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத் துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகின்றனர்; அவர்கள் ஒன்றும் உத்தமர்கள் அல்ல. தமிழகத்தின் நலன்களுக்கு மத்திய அரசு நிதி தர மறுக்கிறது. அதற்காக, பா.ஜ.,வினர் போராட முன்வரவில்லை.

டில்லி பாணி அரசியல்

மஹாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், 3,000 கோடி ரூபாய் நிதியை, பா.ஜ., அரசு தர மறுக்கிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2,152 கோடி ரூபாயை விடுவிக்காமல், மத்திய அரசு மறுத்து வருகிறது.தமிழகத்திலும், டில்லி பாணியில் அரசியல் செய்யலாம் என, பா.ஜ., கனவு காண்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. அனுமதியின்றி போராட போகிறவர்களை, முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை.முதல்வர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை, அப்புறம் பார்க்கலாம். 'டாஸ்மாக்'கில் 1,000 கோடி ரூபாய் ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? எந்த தவறுக்கும் முதல்வர் இடம் கொடுக்க மாட்டார். யார் மீது என்ன குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறலாம்; அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 108 )

மூர்க்கன்
மார் 24, 2025 15:16

என்ன சீனி ம்மா சின்னபுள்ளத்தனமா சேம் சைடு கோல் அடிக்கப்புடாது இன்னிக்கும் நீதிதுறைல நம்மவா அறுபது சாதமானத்துக்கும் அதிக இருக்கவோ ஒய் நீர் பாட்டுக்கு ஊழல் அது இதுணுக்கிட்டு??


S.V.Srinivasan
மார் 24, 2025 07:37

முதல்வர் வீடு என்ன தாஜ்மஹாலா வந்து பார்க்க. நீதிமன்றத்தில் இருப்பவர்கள் உங்களுக்க்கு சாதகமா தீர்ப்பளித்து விட்டால் அவர்கள் உத்தமர்களா? நீதி துறையில் தலை முதல் கால் வரை ஊழல் லஞ்சம் புரையோடி இருக்கிறது என்பது நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியுமய்யா .


Bhakt
மார் 23, 2025 22:28

வடிவேலு சுந்தர்.சி காமெடி தான் ஞாபகம் வருது.


Harindra Prasad R
மார் 23, 2025 08:59

எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை என்று சொல்கிறாரெ அமைச்சர் அவர்களே....


ramani
மார் 23, 2025 06:13

அப்புறம் அழகூடாது. முதல்வர் வீட்டுக்கே வந்து முற்றுகை இட்டார் என்று. நீங்க தைரியமா இருக்கணும்


Pon Thiru
மார் 19, 2025 21:07

என்ன ஒரு திமிரான பேச்சு . வயதுக்கு ஏற்ற குணம் இல்லை. இதையே இவரிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறுதான் .


Narayanan
மார் 19, 2025 14:23

உதயநிதி அண்ணாமலையை அண்ணாசாலைக்கே வரமுடியாது தெரியுமா என்றார் . இப்போ இந்த ராகு பாதி ரகுபதி முதல்வர் வீட்டுக்கு வந்தது பார்க்கட்டும் என்கிறார் . திமுக வின் மொத்த உறுப்பினர்களும் இப்படித்தான் பேட்டை ரவுடி மாதிரி பேசுகிறார்கள். அது எந்த அளவிற்கு அவர்களின் இரத்தித்தில் ஊறி போய்விட்டது பாருங்கள் . அமலாக்கத்துறையையும் விலாசம் குறித்துக்கொள் வா என்றார் உதயநிதி.. அவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் .


Murthy
மார் 19, 2025 13:43

அவ்வளவு பெரிய அப்பாட்டக்காரரா??....வடிவேல் காமெடி போல் உள்ளது


M Ramachandran
மார் 19, 2025 13:03

அடிமை ரகுபதியின் மூளை அந்த அளவிற்கு தான் வேலை செய்யும். அரைகால் சட்டை / அரை டிக்கெட் சினிமா வடிவேலு சுந்தர் சி க்கு சவால் விடும் காட்சியை தான் நினைவிற்கு கொண்டு வருகிறது காட்சி தான் நினைவிற்கு வரும்.


Subramanian.M, Thoothukudi...
மார் 18, 2025 20:56

Annamalai ji.....Congratulations....


சமீபத்திய செய்தி