உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துணை ராணுவம் முதலில் என்னை சுடட்டும்: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., பேச்சு

 துணை ராணுவம் முதலில் என்னை சுடட்டும்: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., பேச்சு

தேனி: ''மேகமலை விவகாரத்தில் துணை ராணுவம் என்னை முதலில் சுட்டு கொல்லட்டும். அதன் பின் தான் மக்களை வெளியேற்ற முடியும்'' என ஆண்டிபட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மகாராஜன் பேசினார். தேனி பங்களாமேட்டில் மேகமலை வழக்கில் மக்களுக்கு ஆதரவாக தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மகாராஜன் பேசியதாவது: கடமலைகுண்டு, மயிலாடும்பாறை ஒன்றியங்களுக்கு உட்பட்ட 102 கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற வனத்துறை போராடுகிறது. ட்ரோன் மூலம் சர்வே செய்துவிட்டோம் என்கின்றனர். அதை ஏற்க முடியாது. வனத்துறை அதிகாரிகள் நேரில் நிலங்களை சர்வே செய்ய வேண்டும். சர்வேயில் ஆக்கிரமிப்பு என உறுதியானால் நிலங்களை எடுத்து கொள்ளுங்கள். ஆனால் 3 தலைமுறைகளாக வாழும் மக்களை வெளியேற்ற கூடாது. அங்குள்ள 3000 மாணவர்களின் கல்வி நிலை என்னாகும். காட்டை நம்பி வாழும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். துணை ராணுவத்தை கொண்டு மக்களை வெளியேற்றுவோம் என்கின்றனர். அப்படி நடந்தால் முதலில் என்னை துணை ராணுவம் சுட்டு கொல்லட்டும். அதன் பிறகு மக்களை கொல்லட்டும். என் உயிர் இருக்கும் வரை மக்களை வெளியேற்ற விடமாட்டேன். தி.மு.க., ஆட்சியில் இப்பிரச்னை கிடையாது. கண்டமனுாரை தாண்டி யாரும் கால் வைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SULLAAN
செப் 23, 2026 07:50

இதெல்லாம் ஒரு பேஷன், கபட நாடகம். இப்படிதான் மமதை பேகம் உதார் விட்டார். பாவம். இன்று அவரது கதி?