உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாட்டரி மொத்த வியாபாரி கைது

லாட்டரி மொத்த வியாபாரி கைது

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் லாட்டரி மொத்த வியாபாரியை, போலீசார் கைது செய்தனர்.ரவுடி தடுப்பு மற்றும் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் அடங்கிய குழுவினர் நேற்று ரோந்து சென்றனர்.அப்போது, ஆலடி ரோடு பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த திரு.வி.க., நகர் ரவி,50; என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாட்டரி சீட்டு சப்ளை செய்யும் மொத்த வியாபாரி என்பதும், இதுதொடர்பாக ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் போலீசார், ரவி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி