உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லோ வோல்டேஜ் பிரச்னை ஏசி, மோட்டார் பம்ப் இயக்க முடியாமல் அவதி

 லோ வோல்டேஜ் பிரச்னை ஏசி, மோட்டார் பம்ப் இயக்க முடியாமல் அவதி

சென்னை:சென்னை உட்பட பல மாவட்டங்களில், 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, 'ஏசி, மோட்டார் பம்ப்' உள்ளிட்ட மின் சாதனங்களை இயக்க முடியாமல், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோடை வெயிலால் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் என, மாநிலம் முழுதும் பல இடங்களில் மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. இதனால் வீடுகளில், 'ஏசி, மோட்டார் பம்ப்' உள்ளிட்ட மின் சாதனங்களை இயக்க முடியாமல், பலரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து, மின் வாரியத்தின் சேவை மையமான மின்னகம் பணியாளர்கள் கூறியதாவது: சென்னை, செங்கல்பட்டு உட்பட பல நகரங்களில் இருந்து, இரவில் லோ வோல்டேஜ் பிரச்னை காரணமாக, ஏசி, மோட்டார் பம்ப் சாதனங்களை இயக்க முடியவில்லை என, புகார்கள் வருகின்றன. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து, லோ வோல்டேஜ் பிரச்னையால், மோட்டார் பம்ப் இயங்காததால், விவசாயத்திற்கு தண்ணீர் பயன்படுத்த சிரமமாக உள்ளதாக புகார்கள் வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை வெயில் கடுமையாக இருப்பதால், வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாடு அதிகம் உள்ளது. லோ வோல்டேஜ் உட்பட அனைத்து புகார்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க, பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை