உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜினாமா முடிவில் மதுரை மேயர்; கலக்கத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்

ராஜினாமா முடிவில் மதுரை மேயர்; கலக்கத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள்

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த பல கோடி ரூபாய் சொத்து வரி விதிப்பு முறைகேட்டில் கணவர் கைதானதை தொடர்ந்து, மேயர் இந்திராணி ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார். இதற்கிடையே மேயர் வரை நடவடிக்கை பாய்ந்துள்ளதால், இவ்வழக்கில் தொடர்புடைய ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர். இம்மாநகராட்சியில் 2023, 2024ல், 150க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களுக்கு அதிகாரிகள் 'பாஸ்வேர்டை' பயன்படுத்தி சொத்து வரியை குறைத்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக அ.தி.மு.க., புகார் எழுப்பியது. 2024ல் மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் பலருக்கு தொடர்புள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநகராட்சியின் ஐந்து மண்டல, இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்தனர். பில் கலெக்டர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என 19 பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உதவி கமிஷனர், ஓய்வுபெற்ற அதிகாரிகள், பில் கலெக்டர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தின் சூத்ரதாரியாக இருந்து செயல்பட்டது, மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் என்பதை போலீசார் கண்டறிந்து, அவரை கைது செய்ய தீவிரமாகினர். இதையறிந்ததும், சென்னைக்கு சென்று பதுங்கினார். தகவல் போலீசாருக்கு தெரிய வர, சென்னை ஹோட்டலில் தங்கியிருந்த பொன் வசந்தை கைது செய்தனர். சென்னையில் இருந்து பொன் வசந்தை, மதுரைக்கு அழைத்து வரும் வழியில், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக பொன் வசந்த் தெரிவிக்க, அவரை பரிசோதனைக்காக மருத்துமனையில் சேர்த்துள்ளனர். கணவர் கைதையடுத்து, தன் மேயர் பதவியை ராஜினாமா செய்ய இந்திராணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொன் வசந்த் கைதை அடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோரை போலீசார் அடுத்தடுத்து கைது செய்ய திட்டமிட்டு உள்ளனர். தன் கணவர் கைதானதை தொடர்ந்து, லோக்கல் அமைச்சரான தியாகராஜனை சந்தித்து உதவி கேட்க மேயர் இந்திராணி, அமைச்சர் வீட்டுக்கு சென்றுள்ளார். இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்த அமைச்சர் தியாகராஜன், 'இந்த விஷயத்தில் என்னால் உதவ முடியாது; சட்ட ரீதியில் பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்' என சொல்லி, இந்திராணியை அனுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Bhaskaran
ஆக 15, 2025 18:34

சுருட்டிய பணத்தை மீட்க வடக்கு இல்லாத திராவிட மாடல் .


Balaji Seshan
ஆக 14, 2025 19:32

எலக்சனுக்கு தலைக்கு 10000 ருபாய் குடுப்பாரு ஓட்டு போடுங்க தீ மு க, ஆ ஈ ஆ தீ மு கா விற்கு.. வாழ்க தமிழ் நாடு


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 14, 2025 12:40

இன்னும் இவர் ராஜினாமா முடிவில் தான் உள்ளார். ராஜினாமா செய்யவில்லை. ஆகவே அடுத்த தேர்தலில் இவருக்கு கண்டிப்பாக எம்எல்ஏ சீட் உறுதி அதற்காக கூட இவர் மேயர் என்பதையும் மறந்து மந்திரியை இரண்டு மணி நேரம் காத்திருந்து பார்த்துள்ளார். திமுக ஜெயித்தால் மந்திரி பதவி உண்டு. வாழ்க தமிழ் வளர்க தமிழகம்


Karthik Madeshwaran
ஆக 14, 2025 11:06

இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட ஒருவரை கூட விட கூடாது. அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் சரி. முக்கியமாக மதுரை மேயரை தான் முதலில் கைது செய்ய வேண்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலுக்கு துணைபோனவர் இவர் தானே ? இந்த ஊழலில் திமுக கவுன்சிலர்கள், அதிமுகவை சார்ந்த கவுன்சிலர்கள், முக்கியமாக சோலைராஜா, மதிமுக கட்சியினர், சில பிஜேபி ஆதரவாளர்களும் அடக்கம். யாரையும் விடாதீர்கள். 150 கோடி ஊழல். அநியாயம்.


Sundar Pas
ஆக 14, 2025 10:28

திராவிடியன் மாடல்...


தத்வமசி
ஆக 14, 2025 09:45

சரி ராஜினாமாவா? இதெல்லாம் இப்போது அரசியல கிடையாது. குற்றச்சாட்டை மறுக்க வேண்டும், ஆவேசமாக பேச வேண்டும். கவர்னரை புறக்கணிக்க வேண்டும். திராவிடம் போட்ட பிச்சை என்று பேச வேண்டும். சிறைக்கு சென்று வந்தாலும் ராஜினாமா செய்யக் கூடாது. இதெல்லாம் தெரியாம எப்படி திமுகவுல...


S.V.Srinivasan
ஆக 14, 2025 09:39

ரோஷமுள்ள மேயர். ராஜினாமா செஞ்சுட்டாங்க.


c.k.sundar rao
ஆக 14, 2025 09:27

People of the state should feel ashamed of themselves for elected these politicians.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 14, 2025 09:19

யார் வேண்டுமானாலும் என்ன கருத்தையும் எழுதலாம். இதுவரை திருடியது இருநூறு கோடிகள் மட்டுமே என்று சொல்லமுடியாத அளவு இன்னும் தோண்டினால் இரண்டாயிரம் கோடிகளாகவும் ஆகலாம். ஆனால் நீதிமன்றத்துக்கு சென்றால் இவர்கள் உத்தமர்கள் என்று பட்டய சான்றிதழ் கொடுத்து இவர்களை எதிர்த்து வழக்கு தொடுத்தவர்களுக்கு இருநூறு கோடிகள் அபராதம் விதிக்கும் நமது கழக நீதி மன்றங்கள் .


M S RAGHUNATHAN
ஆக 14, 2025 08:20

இது தான் திராவிட மாடல். ஒரே துர்நாற்றமாக இருக்கிறது.


சமீபத்திய செய்தி