உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு

மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=942wrrzi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பொன்முடியிடம் இருந்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரம், அமைச்சர் சிவசங்கருக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.மனே தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றார். அவர் ஏற்கனவே பால்வளத்துறை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் பால்வளத்துறையே அளிக்கப்பட்டது.இந்நிலையில் கவர்னர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது.முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, மனோ தங்கராஜிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜிற்கு முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி மலர்கொத்து வழங்கி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

M R Radha
ஏப் 29, 2025 13:24

மறுபடி மறுபடி கொள்ளை.


Kasimani Baskaran
ஏப் 29, 2025 04:07

நிர்வாகத்திறமை மிக்க செ பா பதவி விலகி ஒரு சில மணி நேரங்களில் மின்சார வாரியம் செயல் இழந்து விட்டது என்று நீதிமன்றத்தில் மனுக்கொடுத்து சிறப்பு நீதிபதி மூலம் விசாரித்தால் திரும்ப பதவி கொடுத்து விடலாம்.


KavikumarRam
ஏப் 28, 2025 22:05

தமிழகம் தொடர்ந்து நாசத்தையே சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இவர்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் வெட்க்கித் தலைகுனியவேண்டும். .


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 22:00

உதவி. ஜார்ஜ் பொன்னையா? ஜெயம்.


S SRINIVASAN
ஏப் 28, 2025 21:47

திராவிட மாடலின் அமைச்சர்.


நிக்கோல்தாம்சன்
ஏப் 28, 2025 21:23

நண்பர்களே , எதற்காக மனோ தங்கம் முன்னர் நீக்கப்பட்டார் என்று நினைவிருக்கா?


sridhar
ஏப் 28, 2025 20:58

அதிருப்தியில் இருந்த பலம் வாய்ந்த தென் மாவட்ட கிறிஸ்துவர்கள் lobby ஐ சமாதான படுத்தியாச்சு . Thoo..


V Venkatachalam
ஏப் 28, 2025 20:09

பழைய குருடி, கதவ தொறடி. ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்..


புதிய வீடியோ