உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!

கிணற்றுக்குள் இருக்கும் தவளை; சீமான் மீது மார்க்சிஸ்ட் சண்முகம் பாய்ச்சல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிணற்றுக்குள் இருக்கும் தவளை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.அவரது பதிவு: கிணற்றுக்குள் இருக்கும் தவளை உலகம் இவ்வளவுதான் என்று கருதிக் கொள்ளுமாம். அதுபோல் சீமான் எனும் தவளை தன்னைத் தவிர தமிழகத்தில் யாருமே போராடுவதில்லை என்று பிதற்றிக்கொண்டு திரிகிறது.ரிதன்யாவுக்காக மாதர் சங்கம் எழுப்பிய குரல் கிணற்றுக்குள் இருந்த சீமான் தவளைக்கு கேட்காமல் போயிருக்கலாம். இவ்வாறு சண்முகம் கூறியுள்ளார். நிருபர்கள் சந்திப்பில் பேசிய சீமான், ''ரிதன்யா தற்கொலை சம்பவத்தில் அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மாதர் சங்கங்கள், பெண்ணியவாதிகள் என யாரும் பேசவில்லை.எல்லோரும் எங்கே சென்றீர்கள்? கொக்கைன், கஞ்சா, டாஸ்மாக் சரக்கைக் குடித்துவிட்டு படுத்துவிட்டீர்களா? என கூறியிருந்தார். தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில், இவ்வாறு சண்முகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தாமரை மலர்கிறது
ஜூலை 16, 2025 19:40

சண்முகம் மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட். சீமான் ஒரு நவீன கம்யூனிஸ்ட். ரெண்டுல யாரு பெருசுன்னு சும்மா அடிச்சு காட்டு.


R.P.Anand
ஜூலை 16, 2025 17:42

234 தொகுதி தனி ஆளா நிக்குது. எங்க நீ மானமுள்ள ஆள் அப்படி ன்னா 25 தொகுதி ல தனியா நில்லு பார்ப்போம். வயசான அரசியல் அல்ல கை எல்லாருமே உலற ஆரம்பிச்சுட்டீங்களா ... விக்கு மண்ட எப்படி தான் சமாலிப்பரோ


தமிழ் மைந்தன்
ஜூலை 16, 2025 17:03

இவர் அறிவாலய தவளையா?


vadivelu
ஜூலை 16, 2025 17:31

இல்லை, காக்கா


RAVINDRAN.G
ஜூலை 16, 2025 16:57

கம்யூனிஸ்ட் இருக்கும் இடம் உருப்படாது. அந்த போராட்ட காலங்கள் தியாகிகள் இப்போது இல்லை. இப்போது இருப்பவர்களைப்பற்றி சொல்லவேண்டாம்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 16, 2025 16:47

ரஷ்யா, சீனா வின் தவளைகள் செத்து மண்ணோடு மண்ணாகி போய்விட்டது. இந்திய குட்டையில் இருக்கும் தவளைகள் மழை கால கக்தல் கத்துகிறான்கள். அதுக்காக சீமாண்டியை ஆதரிக்க கூடாது


Kjp
ஜூலை 16, 2025 16:42

பெட்டி சீட்டு இது தான் எங்களுக்கு முக்கியம்.எங்கள் போராட்ட குணம் எல்லாம் ஒடுங்கி போய் கொள்ள காலம் ஆகி விட்டது.


panneer selvam
ஜூலை 16, 2025 16:27

Shanmugam ji , let Seeman may be a frog in the well but you are an earthworm and rarely come out of mud . Just look at your position in front of a mirror


naranam
ஜூலை 16, 2025 15:58

எதற்குமே பயன் படாத ஒன்றுக்கும் உருப்படாத உதவாக்கரைகள் இந்த மார்க்சிஸ்டுகள்.


Rajah
ஜூலை 16, 2025 15:40

பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற ஒரே கொள்கை அடிப்படையில் திமுகவோடு கூட்டணி வைத்துள்ள கட்சிகள் அனைத்தும் உண்மையில் திமுகவை அவமானப்படுத்துகின்றது. உன்னால் தனித்து நின்று பாஜகவை வெல்ல முடியாது அதற்கு நாங்களும் தேவை என்று சொல்கின்றனர். மானமுள்ள திமுக தனித்து நிற்கலாமே? முடியாது. கிணற்று தவளை என்று கூறும் நீங்கள் தனித்து நின்று சீமானை விட அதிக வாக்குகளை வாங்க முடியுமா? முடியாது. என்ன செய்வது வாங்கும் பணத்திற்கு கூவத்தானே வேண்டும் ?


Ramanujadasan
ஜூலை 16, 2025 15:13

இருபத்தி ஐந்து கோடி வாங்கி கட்சிகளை அடமானம் வைத்த கம்யூனிஸ்ட் வியாபாரிகளுக்கு சீமான் எவ்வளவோ மேல்