உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மே 7ல் பதவியேற்கும் விஜய்; நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா

மே 7ல் பதவியேற்கும் விஜய்; நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக நடிகர் விஜய் மே 7ம் தேதி பதவியேற்கிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அதற்கான விழா நடைபெறுகிறது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் குறைவாக இருந்த போதும், நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ளார்.இந் நிலையில் மே 7ம் தேதி அவர் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கான பிரமாண்ட விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சென்னையில் ஆலோசனை நடத்தி உள்ளனர். விஜய் முதல்வராக பதவியேற்கும் அதே நாளில் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். யார், யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பது குறித்த ஆலோசனைகளும் தவெகவில் தொடங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !