உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக காத்திருக்கும் லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்காக காத்திருக்கும் லட்சம் பேர்

திருப்பூர் : ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பை, தமிழக அரசு எப்போது வெளியிடும் என எதிர்பார்த்து, பி.எட்., பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யானது, ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வை நடத்துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி, ஆண்டுக்கு இருமுறை இந்தத் தேர்வை நடத்த வேண்டும்; ஆனால், 2023 அக்டோபர் மாதத்துக்கு பின், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை.கடந்த, 2024 ஜூலை மாதம் வருடாந்திர தேர்வு அட்டவணையில், டெட் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசும், ஆசிரியர் தேர்வு வாரியமும் அறிவிப்பு வெளியிட்டன. இருப்பினும், 2024ம் ஆண்டு நிறைவு பெறும் வரை தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்காக மாநிலம் முழுதும், இடைநிலை ஆசிரியர்கள், பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள் லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.ஆசிரியர்கள் கூறுகையில், 'டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர முடியும். தேர்வு நடக்கும் தேதியை நடப்பாண்டு, தமிழக அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கத்தரிக்காய் வியாபாரி
ஜன 28, 2025 13:33

இந்த ஒருலட்சம் பேர் அடுத்த தேர்தலில் தீயமுகவிற்கு ஓட்டு போடுமாறு அவர்களுடைய தேர்தல் வாக்குறுதி இருக்கும்.


Kasimani Baskaran
ஜன 28, 2025 07:15

செபா தொழில் நுணுக்கத்தை பொதுமக்கள் கண்டுபிடித்து விடுவதால் இந்தமுறை பதவிக்கு முற்றிலும் வேறுவகையில் வசூலிக்க வாய்ப்பு உண்டு. திராவிட நீதியின்படி தகுதியுள்ள ஓரிருவர் தவிர மீதி எல்லாம் பணம் மூலமும் பதவிக்கு வருவார்கள்.


Bhaskaran
ஜன 28, 2025 07:10

இதில் எத்தனை பேர் தகுதி ullavargal ஆகா இருப்பார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை