உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.தமிழக அரசில் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=la5lvcsc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கில் தொடர்புடைய 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக, அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த சொத்துக்கள், துாத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ளன.அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அனிதா ராதாகிருஷ்ணன், லஞ்ச ஊழல் செய்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டதாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு நடத்தி வருகிறது.இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அனிதா ராதாகிருஷ்ணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை நிராகரித்த ஐகோர்ட், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அமைச்சருக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து, அமைச்சரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

c.k.sundar rao
ஜன 23, 2025 23:49

Peanuts?.


sankaranarayanan
ஜன 23, 2025 21:21

இது போன்று அநேக அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் செய்த ஊழல்களுக்கு அடுத்த திராவிட கட்சி ஆளும்போது அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படு வருகின்றன இந்த ஆட்சியில் செய்கிற ஊழல்களுக்கு அடுத்த திராவிட கட்சி ஆளும் போது அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் இதுதான் திராவிட மாடல் அரசியிலில் அந்தரங்க விளையாட்டு இதனால் எந்த அமைச்சரும் எந்த ஆட்சியிலும் பதவி விலக வேண்டாம் சொத்துக்களையும் இழக்க வேண்டாம் சிறிதுகாலம் அவர்களின் பெயர்கள் ஊடகங்களில் வந்து பிறகு அழிந்தே போயிடும் இதுதான் நாட்டின் நடப்பு


Kasimani Baskaran
ஜன 23, 2025 20:17

அந்த சார் ஒரு நாள் வாட்ச் வாங்கி அதை கீழே தூக்கி போட இந்த அளவுக்கு பணம் செலவழிப்பார்.


Shivam
ஜன 23, 2025 23:17

ஏப்பா ஊசி ரபேல் வாட்ச் 3 லட்சம், வாங்குனவனே சொன்னால் அவன போய் கேளு


Raghavan
ஜன 23, 2025 20:14

இதெல்லாம் சும்மா ஒருநாள் பிரியாணி குஆர்டெர் டி செலவு. இதுக்கு ஒரு கேஸ் அது இழுக்கும் ஒரு 10 வருடம் இதுக்குப்போய் அனாவசியமான தெண்ட செலவு. தேவையே இல்லாத வேலை. அவனவன் கடப்பாரையை முழுங்கிவிட்டு சும்மா இருக்கிறான் அவனை புடிக்காமல் கமர்கட்டு சாப்பிட்டவனை புடிக்கிறார்கள்.


Ramesh Sargam
ஜன 23, 2025 19:03

வெறும் ஜுஜுபி 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்தான் இவர் வசம் இருந்ததா...?


V RAMASWAMY
ஜன 23, 2025 19:03

ஜுஜுபி


nv
ஜன 23, 2025 18:59

1.26 கோடி வெறும் ஒரு நாள் varavu இந்த மாதிரி ஆட்களுக்கு!! இதை முடக்கி?? ED க்கு வேலையில்லை! பெரிய பெரிய்ய முதலைகள் பல ஆயிரம் கோடிகளில் புரள்கிறது !!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை