வாசகர்கள் கருத்துகள் ( 1 )
விசாரணை வருவதுக்குள்
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னைக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு குறித்து அக்.,23க்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் துரைமுருகன் மீது கடந்த 2012ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அவரது மனைவிக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு வேலூர் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை, கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து அரசாரணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இது தொடர்பாக அக்.,23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசாரணை வருவதுக்குள்