உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்போதாவது உணர்ந்து பாருங்கள்! தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வெடித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

இப்போதாவது உணர்ந்து பாருங்கள்! தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் வெடித்த மத்திய அமைச்சர் எல்.முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0luxp56k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளது. இதையடுத்து முதலில் இருந்து மீண்டும் பாடியுள்ளனர். ஆனால் இரண்டாம் முறை பாடப்பட்டபோதும் தவறாகவே பாடியுள்ளனர். மொத்தத்தில் நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் தி.மு.க.,வினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் ஸ்டாலின். மத்திய அரசு கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். தற்போது தனது புதல்வர் உதயநிதி பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்?தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதியை ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா?தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவர்னர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா?நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியதற்கு, ''இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக்கி விடாதீர்கள்'' என மழுப்புகிறார் உதயநிதி. கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சனையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும். கவர்னர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? கவர்னருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.இவ்வாறு தமது பதிவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

tadco home palaz sales and service,
அக் 26, 2024 19:17

தமிழ்த்தாய் வாழ்த்தை ஒரு தமிழன் தான் உணர முடியும்?


தமிழன்
அக் 26, 2024 15:28

நிகழ்ச்சியில் பாடியவர்கள் இன்னமும் பதவி இடை நீக்கம் செய்யவில்லையா.. வேண்டும் என்றே அமைச்சர் உதயநிதியை மாட்டி விட வேண்டும் என்று அந்தத் நிகழ்ச்சியில் பாடிய ஊழியர்களை பதவி இடை நீக்கம் செய்ய வேண்டும்.


குறை ஒன்றுமில்லை இறைவனே
அக் 26, 2024 14:17

தமிழ் தெரியாத தெலுங்கன் முதலமைச்சர்.


Subash BV
அக் 26, 2024 13:20

Nothing strange. Guys dont know first of all to pramote tamil language properly. They depends on English even in govt schools. HOW ONE CAN EXPECT LOVE ON TAMIL LANGUAGE. THINK SERIOUSLY PUT TAMIZAGAM FIRST.


kulandai kannan
அக் 26, 2024 12:13

உதயநிதி ஏன் எப்போதும் திக்கித் திணறிப் பேசுகிறார்?


suresh
அக் 26, 2024 04:13

நுனி கிளையில் இருந்து கொண்டு மரத்தை வெட்டுகிறவர் தான் தான் இப்படி கருத்து கூற முடியும், தமிழ் தெரியாத தமிழ் ஒழுங்காக பேச முடியாத தமிழ் நாட்டு முதல் அமைச்சர் மற்றும் அனைத்து தமிழர்களும் வெட்கப்படவேண்டிய விடயம். நாங்கள் இங்கிலாந்தில் எங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கிறோம், நீங்கள் தமிழ் நாட்டில் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுங்கள், தமிழை முதல் பாடம் அல்லது கட்டாயப் பாடம் ஆக்குங்கள்.


தமிழன்
அக் 26, 2024 00:09

இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டியது இதுதான் அரசு அதிகாரிகளை நம்பி அவர்கள் சொற்படி ஆட்சி நடத்தினால் என்ன ஆகும் என...


தமிழன்
அக் 26, 2024 00:07

அமைச்சர் உதயநிதிக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு தவறாக தமிழ் தாய் வாழ்த்து பாட பட்டது என அந்த அரசு அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்கள் என்று நாளைக்கு ஒரு செய்தி வரும் பாருங்கள்


T SANKAR
அக் 25, 2024 22:51

வைர முத்து தங்க முத்து அங்க முத்து அனைவரும் பதில் சொல்லுவார்கள் வேறு சப்ஜக்ட்க்கு திசை திருப்பப்படும்


venugopal s
அக் 25, 2024 22:24

தமிழே தெரியாதவர்கள், தமிழர் அல்லாத பாஜகவினர் தமிழ்நாட்டை எப்படியாவது ஏமாற்றியாவது ஆள நினைக்கும் போது தமிழை தப்பாக பேசும் திராவிடர்கள் ஆள்வதில் தவறே இல்லை!


Balaji
அக் 25, 2024 22:33

தமிழ் தெரிந்தவர்கள் தான் நாங்கள் என்று ஏதாவது உங்களிடம் சட்டிபக்கட் வாங்கணுமா ஷாமியோவ்? போவியா... மானம் மறந்த கூட்டம்..


hari
அக் 25, 2024 22:38

எங்களுக்கு ஒரு காமெடி பீஸ்


Pattabiraman Vengeteraman
அக் 26, 2024 10:17

ராகுல், ப்ரியங்கா, சோனியா தூய தமிழர்கள். இவர்களின் காலை பிடித்து கொண்டுதான் உங்கள் துண்டு சீட்டு திராவிடர் ஸ்டாலின் இங்கு கொக்கரித்து கொண்டிருகிறார். உங்களை போன்றவர்களால்தான் இந்த கூத்தாடிகளின் ஆட்டம். தொடரட்டும் உங்கள் சேவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை