வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எங்கே போனார் செல்வப்பெருந்தகை.
காங்கிரஸ் கட்சி குறித்து அமைச்சர் பெரியசாமி கருத்தை, 'குப்பை' என கார்த்தி எம்.பி., விமர்சித்துள்ளார். மேடையில் இருந்த ஜோதிமணி எம்.பி., எதிர்ப்பு தெரிவிக்காதது, காங்கிரஸ் கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரில் நடந்த ஒருதிருமண விழாவில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், ''மேடையில் ஜோதிமணி இருக்கிறார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்கள், பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு தான் வருவர். ஆனால், தி.மு.க.,வை பொறுத்தவரை, சாமானியர்களை உயர்த்தி பிடித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய கட்சி. அதை சொல்வதற்காகவே காங்கிரசோடு ஒப்பிட்டு பேசுகிறேன்,'' என்றார்.அமைச்சரின் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, தன் சமூக வலைதள பக்கத்தில், 'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கே காங்கிரஸ் தலைவர்கள் வருவர் என்ற அமைச்சர் பெரியசாமியின் கருத்து ஒரு குப்பை' என குறிப்பிட்டுள்ளார்.அவரது கருத்தை ஆதரித்தும், பெரியசாமி மற்றும் ஜோதிமணியை விமர்சித்தும், காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.மேடையில் ஜோதிமணி, அக்கருத்தை எதிர்க்காதது ஏன் எனகேட்டுகடுமையாக காங்கிரசார் விமர்சிக்கின்றனர்.மதுரை விமான நிலையத்தில் கார்த்தி கூறியதாவது: பீஹார் தேர்தலில் 'இண்டி' கூட்டணி வலுவாக உள்ளது. இம்முறை வெற்றி வரும் என்று நம்புகிறோம். எங்களுக்கு தேர்தல் கமிஷன் மீது பல சந்தேகங்கள் உள்ளன. தேர்தலுக்கு முன் அதையெல்லாம் தீர்ப்பார்கள் என நம்புகிறேன். அ.தி.மு.க., கூட்டத்தில் த.வெ.க., கொடிகள் இருந்ததை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.தமிழக போலீசாரின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. 17 வயது சிறுமி கொலை வழக்கில் கைதானவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதனால் போலீசார் மீது பல கேள்விகள் எழுகின்றன. த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமறைவாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.மானாமதுரையில் கார்த்தி கூறியதாவது: தெரு, சாலைகளில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேநேரம் அவற்றுக்கு குறிப்பிட்ட பெயர்களை மட்டும் வைக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மறைந்த தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும். ரயில்வே பொது மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அனைத்தும் ரயில்வே வாரியத்திற்கு சென்று விட்டது. பெரிய நகரங்களுக்கு இடையே மற்றும் விரைவாக ரயில்களை இயக்குவதில் குறியாக உள்ளதால் சிறிய ஊர்கள் மற்றும் நகரங்களை தவிர்த்து வருகிறது என்றார்.
எங்கே போனார் செல்வப்பெருந்தகை.