| ADDED : ஏப் 22, 2025 01:57 PM
சென்னை: பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவாகப்பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.சேலம் மாவட்டம் ஆத்தூரில், அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசிய சம்பவத்தை கண்டித்து, அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gr12ruo9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி பேசியதாவது: பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும். இவற்றை பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் மறந்துவிடக்கூடாது. தி.மு.க., ஆட்சி இனி தமிழகத்தில் எப்போதுமே வரக்கூடாது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., முதல்வராக வருவதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.