உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை வாங்கித் தருவதாக மோசடி; கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி

வேலை வாங்கித் தருவதாக மோசடி; கோர்ட்டில் ஆஜரானார் அமைச்சர் செந்தில் பாலாஜி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 2011 - 2015 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏராளமானோர் மோசடி புகார் கொடுத்தனர். போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2 ஆயிரம் பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். பிப்ரவரி 20ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

nv
ஜன 10, 2025 09:54

நமது நீதிமன்றங்களில் மேல் இருந்த மரியாதை இந்த வழக்கை விசாரிக்கும் விதத்தில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் மக்கள்


spr
ஜன 09, 2025 19:31

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.பிப்ரவரி 20ம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அடுத்த 150 பேருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.- பிடிவாரண்ட் அல்லவா அனுப்பியிருக்க வேண்டும் இந்த வழக்கின் தீர்ப்பு முன்பே எழுதப்பட்ட ஒன்றே எடுத்துக் கழகக் குற்றவாளிகள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுத்து விட்டால் வழக்கு தண்டனை எதுவுமேயில்லை


Ramesh Sargam
ஜன 09, 2025 19:09

நமது நீதிமன்றம் சம்மன் அனுப்பும், ஜாமீன் கொடுக்கும், வழக்கு தேதியை மாற்றி மாற்றி அறிவிக்கும். அவ்வளவுதான் நமது நீதி மன்றத்தின் செயல்பாடுகள். வழக்குகள் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது லட்சத்தில் ஒரு வழக்கில்தான்.


Narasimhan
ஜன 09, 2025 18:26

கொள்ளையில் பங்கு கிடைத்தவுடன் கேஸ் மூடப்படும்


VENKATASUBRAMANIAN
ஜன 09, 2025 18:23

ஆமை வேகத்தில் நீதிமன்றம் செயல் படுகிறது. இதனாலாதான் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இதுவே மக்களின் கேள்வி குறி. நீதிமன்றங்கள் விரைவாக செயல் படவேண்டும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 09, 2025 16:31

2011-15 ல் நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2000 பேர் மீது வழக்கு. அமைச்சர் மற்றும் 150 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜி மட்டும் ஆஜர் ஆனார். மீதி 150 பேருக்கு சம்மன் மீண்டும் அனுப்பப்படுகிறது. சூப்பர்.


veera
ஜன 09, 2025 17:43

மெயின் தல தான் முதலில் வரணும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 09, 2025 21:59

அப்போ மீதி 1849 பேருக்கு எப்ப சார் சம்மன் அனுப்புவாங்க?


Ramaswamy Jayaraman
ஜன 09, 2025 16:07

இந்த வழக்கு என்றுமே முடிவுக்கு வராது. எத்தனை நீதி அரசர்கள் இந்த வாழ்க்கை விசாரிப்பார்கள் என்பது இறைவனுக்கும் தெரியாது. வழக்கு முடிவுக்கு வர ஒரே வழி, இவர் கட்சி மாறி அந்த கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் சீக்கிரமாக முடிவு theriyum.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 09, 2025 15:08

எந்த கட்சியிலே அதிக சார் கள் இருக்காங்க ????


Kasimani Baskaran
ஜன 09, 2025 14:59

ஒரு வருடத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றால் ஜவ்வாக இழுத்துக்கொண்டு போவது புது தொழில் நுணுக்கம்.


அருணாசலம்
ஜன 09, 2025 14:40

இப்படியே சம்மன் வழங்க மட்டும் ஒரு வருடம் ஓட்டுவார்கள்.


Rangarajan Cv
ஜன 09, 2025 15:04

Advantage being minister and from running party.


சமீபத்திய செய்தி