உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலில் சிக்கலோ சிக்கல்: மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன்

நெல் கொள்முதலில் சிக்கலோ சிக்கல்: மாற்றி மாற்றி பேசும் அமைச்சர்கள்: நயினார் நாகேந்திரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் பா.ஜ., சார்பில், மக்கள் சந்திப்பு மற்றும் கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பங்கேற்றார். கூட்டத்துக்கு பின் அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று பெருமை பேசிக் கொள்கிறார். கடந்த ஜூன் மாதமே குறுவை சாகுபடி தொடங்கி விட்டது. மொத்தம் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவல் முதல்வருக்கு நன்கு தெரியும். ஆனாலும், நெல் கொள்முதலை பிரச்னையின்றி செய்ய, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடவில்லை. நெல் அறுவடையானதும், அதை கொள்முதல் செய்யாததால், மழையில் நனைந்து விளைவிக்கப்பட்ட அனைத்தும் வீணாகி விட்டது. கேட்டால், வாங்கும் நெல்லை கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க, போதுமான கிடங்கு இல்லை என்கிறார்கள். இதெல்லாவற்றையும் கடந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டால், மூட்டைக்கு 42 ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது. இதற்கான முழு காரணமும் தி.மு.க., அரசுதான். பயிர் பாதித்த இடங்களுக்கு அதிகாரிகள் யாரும் இன்றுவரை செல்லவில்லை. பெயருக்கு அங்கு சென்ற துணை முதல்வர், பாதிப்பை பார்க்கவில்லை; வந்ததாக கணக்குக்காட்ட படம் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டார். கொள்முதல் செய்யாத நெல் பாதிப்புக்குள்ளான விஷயத்தில், அமைச்சர்கள் சாக்கு போக்கு சொல்கிறேன் என்று, மாறி மாறி பேசி வருகின்றனர். கரூர் உயிர் பலியில் நடிகர் விஜய் மீது குற்றம் சொல்ல முடியாது. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

theruvasagan
அக் 27, 2025 16:14

ஞாபகம் இருக்கா. நெல் கொள்ளை முதல்.


pakalavan
அக் 27, 2025 14:22

டன்டனக்கா


Indian
அக் 27, 2025 10:38

விவசாயிகளுக்கு மொதல்ல மத்திய அரசு கிட்ட, ஒன்றிய அரசு கிட்ட சொல்லி ஏதாவது உதவலாம்ல? மத்திய அரசு உதவ வில்லை என்றால் யாரும் பா ஜா வுக்கு ஓட்டு போட மாட்டார்கள் ?


vivek
அக் 27, 2025 11:30

..முதலில் முகத்துவாரம் அடைப்பை எடு ங்க


ஆரூர் ரங்
அக் 27, 2025 14:57

என்ன உதவினாலும் ஸ்டிக்கர் ஒட்டிகளுக்குதான் ஓட்டு. நன்றி கெட்ட கூட்டம்.


Mario
அக் 27, 2025 09:11

இப்படிக்கு நாலரை கோடி


vivek
அக் 27, 2025 10:23

பாவம்


VENKATASUBRAMANIAN
அக் 27, 2025 08:04

டெல்டா மாவட்டங்களுக்கு சென்று இதை கூறுங்கள். அப்போதுதான் பாஜக நம் பக்கம் என்று மக்களுக்கு புரியும். சும்மா அறிக்கை விட்டால் போதுமா.


Mani . V
அக் 27, 2025 05:48

மன்னரும், இளவரசரும் இப்பொழுதுதான் மந்திரிகள், கூட்டணிக் கட்சியினர், வாழ்நாள் கொத்தடிமைகள் புடைசூழ Bison படம் பார்த்துள்ளார்.


Kasimani Baskaran
அக் 27, 2025 03:53

தண்ணீரில் நனைந்து, முளைத்த நெல்லை கொள்முதல் செய்து ஒன்றும் ஆகப்போவது இல்லை. அரசு கஜானாவுக்கு நட்டம்.


சமீபத்திய செய்தி