உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை பா.ம.க.,வுக்கு அமைச்சர்கள் பதில்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை பா.ம.க.,வுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர்.சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ம.க., -- ஜி.கே.மணி: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சமூக நீதியின் அடித்தளம். ஜாதி ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மதம், ஜாதியின் பெயரில்தான் நம் நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் படித்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றால் ஜாதி ஒழியும். அதுவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தொகுப்பு முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அமைச்சர் மெய்யநாதன்: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை, மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என, பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாதிவாரி கணக்கடுப்பு நடத்தாமல், மத்திய அரசுதான் காலம் தாழ்த்துகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, கூட்டணி கட்சியான பா.ஜ.,வை, பா.ம.க., வலியுறுத்த வேண்டும்.பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: ஒரு மாநிலத்தில் உள்ள ஜாதி, வேறு மாநிலத்தில் வேறு பிரிவில் வரும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில், எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடிவெடுத்தால், நன்றாக இருக்கும்.த.வா.க., - வேல்முருகன்: ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. எனவே, தெலுங்கானா அரசு போல, தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.* காங்கிரஸ் - செல்வப்பெருந்தகை: தெலுங்கானா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்போது, அதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. தெலுங்கானாவில் எடுக்கப்பட்டது ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்ல; ஜாதிவாரி சர்வே.அமைச்சர் சிவசங்கர்: மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. அதற்கென மத்தியில் தனி துறையே உள்ளது. அவர்களை செய்ய வேண்டியதை, மாநிலங்களிடம் தள்ளிவிட்டு கைகழுவ பார்க்கின்றனர். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankar
மார் 23, 2025 06:15

ஊழல்கள் ஓட்டை திமுக படகை மூழ்கடிப்பது உறுதி, மக்கள் ஏமாளிகள் அல்ல.


sankar
மார் 22, 2025 16:55

மங்குனிகல்


konanki
மார் 21, 2025 15:30

ஏங்க சொரியான் ஜாதி களையே இந்த சொரியான் மண்ணில் ஒழித்து விட்டதாக அவன் அடிவருடிகள் தினமும் திராவிட ஊடகத்தில் கூவி வருகின்றனர். நீங்க என்னமோ புதுசா கூவறீங்க?


konanki
மார் 21, 2025 15:26

வழக்கம் போல விடியாத அரசின் பொய் புரட்டு உருட்டு. பீஹார் மாநில அரசு ஏற்கனவே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளை பீஹார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநில அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்து அறிக்கை மாநில அரசின் கையில் உள்ளது. ஆனால் கர்நாடக மாநில அரசு இந்த அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய பயந்து இன்னும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது


Saleemabdulsathar
மார் 21, 2025 14:57

எதுவும் தெரியாமல் தான்அமைச்சராக இருக்கிறாரா பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றி கரமாக எடுத்துவெளிப்படையாக அறவித்துள்ளாரகள் இதை பற்றி அமைச்சருகு தெரியாமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்


kulandai kannan
மார் 21, 2025 14:11

கெட்அவுட் மோடி சொல்வதற்கு மட்டும்தான் அதிகாரமா?


ச.பாலசுப்பிரமணியன்
மார் 21, 2025 13:17

பீகார், தெலங்கானா மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் தான் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தியது.தமிழக அமைச்சருக்கு தெரியாதா?


Anbuselvan
மார் 21, 2025 09:42

கர்நாடகாவில் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணக்கெடுப்பு எடுத்தார்களே? அப்போ அது வேறயா? இப்போது அதை சட்டசபையில் தாக்க கூட ஆயுதம் மேற் கொள்ள பட்டு வருகிறதே.


Oviya Vijay
மார் 21, 2025 08:14

அப்போ தெலுங்கானாவில் நடத்தி அதற்கு பீத்தி கொண்ட இன்டி கூட்டணி ராவுள்க்கு என்ன பதில் சொல்ல போறீங்க..?


अप्पावी
மார் 21, 2025 07:54

நம்மளை விட குறைஞ்ச வளர்ச்சி உள்ள பிஹார் ல 2023 ல ஜாதிவாரிக்கணக்கெடுபு நடத்துனாங்களே. ஒன்றிய அரசுன்னு தொங்கிக்கிட்டிருக்கலை. உங்களுக்கு ஆட்டையப் போடவே காசில்லை. கணக்கெடுப்புக்கெல்லாம் துட்டு எங்கே இருக்கப் போகுது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை