மேலும் செய்திகள்
இன்று மிதமான மழை : வானிலை மையம் தகவல்
22-Apr-2025
இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும்
19-Apr-2025
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர் மாவட்டம் நெய்வாசல் தென்பாதி, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதிகளில், தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் மே, 3 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரலாம். இன்று முதல் மே, 2 வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, திருச்சி, வேலுார் ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பநிலை நிலவியது.
22-Apr-2025
19-Apr-2025