உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்மொழி கட்டாயம்; பிறமொழி அவசியம்

தாய்மொழி கட்டாயம்; பிறமொழி அவசியம்

கோவை: எஸ்.என்.எஸ்.,ராஜலட்சுமி கல்லூரியில், 'வணிகமும் வாழ்க்கையும்' கருத்தரங்கு நடந்தது. கோவை, வழியாம்பாளையத்தில் எஸ்.என்.எஸ்.,ராஜலட்சுமி கல்லூரியில், 'வணிகமும் வாழ்க்கையும்' என்ற கருத்தரங்கு நடந்தது. கல்லூரி தாளாளர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார். அறங்காவலர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஜனனிய நளின் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பேசுகையில், 'மாணவர்கள் தங்களின் தாய்மொழியை தெளிவாக அறிந்து கொள்வது கட்டாயம்; அத்துடன், பிற மொழிகளையும் கற்க வேண்டியது அவசியம். எந்த காரணத்துக்காகவும், மாணவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது. கொண்டுள்ள இலக்கை அடைய அயராது பாடுபட வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் வணிகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது; அதனை தெளிவான அறிவுடன் கையாள வேண்டும்,'' என்றார். சிவக்குமார் வரவேற்றார்; கல்லூரி நிறுவனர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை