உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்; ராஜினாமா கடிதத்தில் டுவிஸ்ட்

பா.ம.க., இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்; ராஜினாமா கடிதத்தில் டுவிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பா.ம.க., இளைஞர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முகுந்தனை இளைஞரணி சங்கத் தலைவராக நியமித்த ராமதாஸின் உத்தரவை, மேடையிலேயே அன்புமணி எதிர்த்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5a5z1fix&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்மூலம் இருவரிடையே, மோதல் போக்கு ஏற்பட்டது. கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்திக்குள்ளாகினார். இதன் வெளிப்பாடாக பா.ம.க.,வின் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இது பா.ம.க.,வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், அதிருப்தியையும் ராமதாஸ் இன்று மீண்டும் வெளிப்படுத்தியிருந்தார். அவரை மத்திய அமைச்சராக்கியதே தான் செய்த பெரிய தவறு என்றும், தனக்கு விருப்பம் இல்லாமல் எல்லோரும் சேர்ந்து அன்புமணிக்கு பதவி கொடுத்து விட்டதாகவும் கூறி, கட்சிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த நிலையில், பா.ம.க.,வின் இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக முகுந்தன் பரசுராமன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை; பா.ம.க., இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தில் அன்புமணியை பா.ம.க., தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது ராமதாஸ் ஆதரவாளர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. யார் இந்த முகுந்தன்?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸின் மூத்த மகளான காந்திமதி பரசுராமனுக்கு பிறந்த 3வது மகன் தான் முகுந்தன். பொறியியல் பட்டதாரி ஆவார். இவரது சகோதரன் பிரித்திவன் தான் அன்புமணியின் மூத்த மகள் சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

s.sivarajan
மே 29, 2025 22:52

படம் climax க்கு நெருங்கிடுச்சு


Krishnamurthy Venkatesan
மே 29, 2025 19:16

குடும்ப கட்சி. ஆவேசமான தொண்டனுக்கு ஸ்பெஷல் ஹல்வா.


Jagan (Proud Sangi )
மே 29, 2025 18:50

இதற்கு தான் முகலாயர் அரசர்கள் ஒரு டெக்னிக் வைத்திருந்தார்கள்.


Tiruchanur
மே 29, 2025 17:18

ராமதாஸை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு உடனே கட்சியை கைப்பற்றுங்க அன்புமணி.


ஆரூர் ரங்
மே 29, 2025 16:20

நாடகமெல்லாம் விளம்பரத்துக்குதான். இல்லாட்டி இந்த கட்சியை வேற யார் கண்டுப்பாங்க?


Sivakumar
மே 29, 2025 17:16

இந்த ஜாதி + குடும்ப கட்சியையும் துருக்கி கொண்டாடி கூட்டணிவைத்து மகிழும் தேசியக்கட்சியை என்னானு சொல்றது


சின்னசேலம் சிங்காரம்
மே 29, 2025 15:30

இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லியே இருந்திருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை