உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

கோவில் ஊழியர் மரணம்: போலீசார் மீது கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருபுவனம் அஜித் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.திருபுவனம் போலீசார் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது. விசாரணை என்ற பெயரில் போலீசார் கடுமையாகத் தாக்கியதாலேயே அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் போலீஸ் ஸ்டேசனில் பணியாற்றிய ஆறு தனிப்படை போலீசாரை் சிவகங்கை மாவட்ட எஸ்.பி, சஸ்பெண்ட் செய்துள்ளார். போலீஸ் விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர் துடைப்பா?திருட்டு புகாருக்காக அஜிதைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு போலீசார், அஜித் மரணத்திற்குக் காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டவிசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.முதல்வர் ஸ்டாலின் போலீஸ் ஸ்டேசன் மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.தமிழக அரசு அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் போலீசார் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ராஜா
ஜூன் 30, 2025 23:00

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல சாத்தான் கள் ராடு ஏற்றி காவல் நிலையத்தில் வரவழைத்து பொறுப்பற்ற அதிகாரிகள் முன்நின்று கொலை செய்த தகப்பன் மகன் கொலை வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் சட்டம் உறங்காமல் இருக்கிறது என்று நம்புவது கடினம்.


sundarsvpr
ஜூன் 29, 2025 20:43

அரசின் நிர்வாக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திறமையானவர் அல்ல. ஆனால் தி மு க பலமிக்க கட்சி. இதனால் நாளை உதயநிதி ஸ்டாலின் அரசின் தலைமை பொறுப்பிற்கு வர வாய்ப்புள்ளது. நல்ல தலைமையுள்ள நபரை மக்கள் தேடவில்லை பலமான எதிர்க்கட்சி தேவை. இது அமையாதவரை தி மு க வை அகற்றுவது கடினம்.


GMM
ஜூன் 29, 2025 20:01

தமிழக போலீஸ் அதிக தேர்வு சாதி மத அரசியல் பின்புலம் அடிப்படையில். வாதமும் ஆள் பார்த்து புரிவதால் வழக்கு எல்லாம் வழுக்கி விடும். வாகனத்தில் தங்க நகைகள் விட்டு செல்வது சரியா.? ஓட்ட தெரியாத கோவில் ஊழியரை அணுக, அவர் தெரிந்த ஒரு நபரை அணுகி, பார்க் செய்த செய்தி. புகார் அடிப்படையில், குணம் மதிப்பிட தெரிய வேண்டும். குற்ற பின்னணி அறியாத புது நபர் விசாரணைக்கு முன் கோவில் அதிகாரி, வருவாய் அதிகாரி மற்றும் குற்றவியல் நடுவர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். திராவிட சுயாட்சி போலீஸ்?


Ramesh Sargam
ஜூன் 29, 2025 19:50

காவல்நிலைய மரணங்கள் மிகவும் கவலையை அளிக்கிறது. நீதிமன்றம் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி காவல்துறையினரையும், ஆளும் கட்சி தலைவர்களையும் கண்டிக்கவேண்டும்.


m.arunachalam
ஜூன் 29, 2025 19:29

அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாமல் பல பல அபிப்ராயங்கள் ஏன் ? . ஏதாவது துறையில் வேலை செய்யும்போது அல்லது நிர்வகிக்கும் போது தான் அந்த கஷ்டம் புரியும் .


rama adhavan
ஜூன் 29, 2025 20:39

அடித்து கொலை செய்வது போலீஸ் வேலையா? அப்போ வீட்டில், வெளியில் நடக்கும் கொலைகளுக்கும்,கொலைகார போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?


m.arunachalam
ஜூன் 29, 2025 21:12

விசாரணை செய்யும்போது ஊழியரின் நடவடிக்கை , பேச்சு எப்படிபட்டதாக இருந்தது அல்லது ஒத்துழைப்பு கொடுக்காமல் மோசமான எதிர்வினை நடந்ததா என்று எப்படி தெரியும் ?. விமர்சனம் எல்லோருக்கும் எளிதுதான் . பிரச்னையை கையாளும் போதுதான் அதன் சிரமங்கள் தெரியும் .


Kalyanaraman
ஜூன் 29, 2025 19:10

சட்டம் தெரிந்த அரசு ஊழியர்கள் தவறு செய்தால் துறை ரீதியான கண் துடைப்பு நடவடிக்கை. ஆண்மையற்ற முதுகெலும்பற்ற சட்டங்கள் சாமானியர்களிடம்தான் தனது வீரத்தை காண்பிக்கும்.


sridhar
ஜூன் 29, 2025 18:49

சாத்தான்குளம் தந்தை மகன் என்று பத்து நாட்கள் உருட்டிய ஊடகங்கள் இப்போது கள்ள மௌனம் .


sekar ng
ஜூன் 29, 2025 18:41

போதைப்பொருள் வியாபாரிகளுக்காக காவல்துறை, அதை எதிர்ப்புவர்களை கொல்கிறது


senthil
ஜூன் 29, 2025 17:54

வல்லவனுக்கு வாழ்க்கை என்கிற விதத்தில் மத்திய மாநில அரசுகள் நிர்வாகம் செய்வது, பேரழிவை நோக்கிய பயணமாகும். திமுக என்ன முறை கேடு செய்தாலும் மத்திய அரசு குற்றம் சொல்வதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை.


புதிய வீடியோ