உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு: அரசியல் கட்சிகளுக்கெல்லாம் இது ஒரு பாடம்

கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு: அரசியல் கட்சிகளுக்கெல்லாம் இது ஒரு பாடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரையில் கட்டுக்கோப்புடனும், ஒழுங்குடனும் நடந்த முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தின் ஆன்மிக ஆழத்தையும், தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தையும் பறைசாற்றி அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது.ஹிந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஏதேனும் ஒரு தலைப்பில் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் அதிகம் வணங்கப்படும் முருகனை முன்னிறுத்தி, மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் 'குன்றம் காக்க... கோவிலை காக்க...' எனும் தலைப்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது.இது ஆன்மிகம் சார்ந்து மட்டுமில்லாமல், தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. தமிழர் வாழ்வில் முருக பக்தி என்பது உள்ளார்ந்த உணர்வு. அத்தகைய உணர்வே எந்தவொரு அரசியல் சாயமும் இன்றி மக்களை மதுரையில் ஒன்றிணைத்தது.ஆன்மிகத்தையும், கலாசாரத்தையும் தமிழக மக்கள் மிகுந்த ஆழத்தோடு அணுகுகின்றனர் என்பதை முருக பக்தர்கள் மாநாடு உணர்த்தியுள்ளது. மாநாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் சொந்த செலவில் வந்தனர். பங்கேற்றவர்களில் 70 சதவீதம் பேர் இளைஞர்களே.இந்தியா முழுவதும் கடவுள் முருகனை பல்வேறு பெயர்களில் வழிபட்டாலும், அறுபடை வீடுகள் தமிழகத்தில் தான் அமைந்துள்ளன. தமிழர் வாழ்வியலில் முருகன் நீக்கமற நிறைந்துள்ளார். முருகனின் கந்த சஷ்டி கவசம் பாடல் இழிவுபடுத்தப்பட்ட விவகாரத்தின் போது அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை என்பது பக்தர்களின் வருத்தம். தொடர்ந்து, சென்னிமலை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தையடுத்து முருகன் மலையை காக்க வேண்டும் என்பதற்காக ஹிந்து முன்னணி இந்த நிகழ்ச்சியை நடத்தியது.ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 'ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒன்று திரள்வோம்' என பேசியதும், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'அரசியல் சார்ந்து இல்லாமல், ஹிந்துக்கள் அனைவரும் இணைய வேண்டும். மதம் மாறுவதை தடுக்க வேண்டும்' என வலியுறுத்தியதும் மாநாட்டில் எழுச்சியை ஏற்படுத்தியது. அரசியல் சார்ந்து இல்லாமல் பக்தியின் அடிப்படையில் ஹிந்துக்கள் ஒன்று திரள வேண்டும் என்ற கருத்தே மாநாட்டில் பரவலாக எதிரொலித்தது.

கந்த சஷ்டி கவசம்

மாநாட்டில் முக்கிய நிகழ்வாக கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது. கந்த சஷ்டி கவசம் குறித்து அண்ணாமலை பேசியபோது, 'கந்த சஷ்டி கவசத்தை இலக்கியமாகவும், ஆன்மிகமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்கலாம். மனித உடலில் தொப்புள் கொடிக்கு கீழே உள்ள பகுதியை பழங்காலத்தில் 'கந்த' எனவும், 'சஷ்டி' என்றால் 'சட்டி' என கூறப்பட்டது.'தொப்புள் கொடிக்கு கீழ் உள்ள பகுதி சட்டி போல் இருக்கும். அதில்தான் கருப்பை உள்ளது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் உயிர் உண்டாகும் என்பதை குறிக்க கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது' என்றார். இந்த விளக்கமும், கூட்டாக அனைவரும் பாடியதும் கந்த சஷ்டி கவசத்தை தினமும் வீட்டில் பாட வேண்டும் என்ற துாண்டுதலை பக்தர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வந்த பக்தர்களை, ஹிந்து முன்னணியை சேர்ந்த 2,000 தொண்டர்கள் வழிநடத்தினர். மாநாட்டை காணும் ஆர்வத்தில் சிலர் போட்டி போட்டுக்கொண்டு மாநாட்டு திடல் முன் வந்தனர். மாநாட்டை நடத்திய நிர்வாகிகள், இருக்கையில் அமரும்படி அறிவுறுத்தியதும் அவர்கள் அமைதியாக போய் அமர்ந்தனர்.வாசலில் இருந்து போலீசார் சோதனை செய்து உள்ளே அனுப்பினாலும், மாநாட்டு திடலில் போலீசார் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் நின்றனர். என்றாலும் எந்த சலசலப்பும் இல்லாமல், கட்டுப்பாட்டோடு பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

பாடமாக அமைந்தது

இரவில் சாலையில் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் வெளியே சென்ற போது போக்குவரத்து ஸ்தம்பித்தது. அத்தகைய சூழலிலும் எவ்வித பிரச்னையுமின்றி தள்ளுமுள்ளு, நெரிசல் இன்றி மக்கள் கட்டுப்பாட்டோடு கலைந்து சென்றனர். இந்த காட்சி எல்லாம் அரசியல் கட்சிகளின் மாநாடுகளுக்கு மாறுபட்டதாக இருந்தது. மாநாட்டிற்கு முன்னதாக மா.கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள், 'மதநல்லிணக்கத்தை கெடுத்து கலவரத்தை உருவாக்க முருக பக்தர் மாநாடு நடக்கிறது' என, எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவற்றிற்கு எல்லாம் பதிலடி தருவதாய் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக மாநாடு நடந்தது. லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் ஒரு மாநாட்டை எப்படி நடத்த வேண்டும் என்று கட்சிகளுக்கு சொல்லும் பாடமாக, முருகர் பக்தர் மாநாடு அமைந்தது எனலாம்.

அரசியலா? ஆன்மிகமா?

மாநாட்டில் அரசியல் கருத்துகள் பேசக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியது. மாநாட்டில் நேரடியாக அரசியல் கருத்துகள் கூறப்படாவிட்டாலும், தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, பின்னணியை மாநாடு பிரதிபலித்தது. தீர்மானத்திலும், தேர்தலில் ஓட்டு வங்கியை அதிகரிக்க ஹிந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என இடம் பெற்றிருந்தது. அண்ணாமலை பேசுகையில், ''ஏற்கனவே பேசிய ஹிந்து முன்னணி வழக்கறிஞர் கனிமொழியின் பேச்சை குறிப்பிட்டு, 'தமிழகத்தில் மதுரை முருகன் மாநாட்டிற்கு முன், மாநாட்டிற்கு பின் என்றுதான் அரசியல் சரித்திரம் இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Palanisamy T
ஜூன் 26, 2025 10:34

ஹிந்துமுன்னணி அமைப்புக்கு நன்றி. இந்த மாநாடு ஆன்மீகம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் நோக்கோடு நடந்துள்ளதை மறுக்க முடியாது. தமிழகம் தவறான பாதையில் செல்வதை ஏற்கமுடியாது. அண்ணாமலையார் ஆன்மிகம் பேசியுள்ளார். கந்தசஸ்டிப் பற்றி விளக்கி யுள்ளார். இவ்வளவுக் காலமாக தமிழகத்தில் வெறும் அரசியல் மட்டும் பேசியவர். யாரோ மேடையில் சொல்லவேண்டு மென்பதை சொல்லிவிட்டார். பொதுவாக ஆங்கிலம் படித்தவர்களுக்கு ஆன்மீகத்தில் ஸிரோவாக யிருப்பார்கள். அரசியல் மேடையில் ஆன்மிகம் பேசலாம். ஆன்மீகமேடையில் அரசியல் பேசக் கூடாது. இந்த ஆன்மீக மாநாடு பகுத்தறிவு மற்றும் ஹிந்துமதத்தை மட்டும் சீண்டிப் பார்க்கும் சமூகவிரோத இயக்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் இனிமேல் ஒரு நல்ல பாடமாக அமையட்டும் .


spr
ஜூன் 25, 2025 17:19

அரசியல் இல்லை ஆன்மீகமே என்பதால், கட்டுப்பாட்டுடன் கூடிய அமைதியான கூட்டம்.பவன் கல்யாண் பாராட்டுக்குரியவர். அவரைப் போல மோடியும் அமித்ஷாவும் தமிழில் பேசினால், அன்றுதான் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும்.


Palanisamy T
ஜூன் 26, 2025 08:24

அமித்ஷா தமிழில் பேசுவதா? ஒன்றிய அரசின் கொள்கைகளை பொறுத்தமட்டில் அவர்களின் இருமொழிக் கொள்கையே அவர்களின் உயிர் மூச்சு.


SUBRAMANIAN P
ஜூன் 25, 2025 13:31

நீயெல்லாம் சாணியை கரைச்சு திமுக கூட்டணி உன் தலையில் ஊற்றினாலும் திருந்தமாட்டே.. உன் டிசைன் அப்படி..


guru
ஜூன் 25, 2025 11:39

கடந்த 10 ஆண்டுகளாக சீமான் மாநாட்டில் இப்படி கட்டுக்கோப்பாக நடக்கும், அவர்களே சுத்தம் செய்து விடுவர். முருகன் மாநாடும் கூட சீமான் கட்சியை பார்த்து பாஜக காபி அடித்தது தான். ஆனால் வந்த பக்த பொதுமக்கள் தான் சுத்தம் செய்துள்ளார்கள். ஏனெனில் இதற்கு முன் பாஜக மாநாட்டில் இப்படி சுத்தம் செய்ததாக செய்தி ஏதும் வரவில்லையே.. நாளை பாஜக மாநாடு போட்டால் இதே அளவு கூட்டம் வருமா?


Krishnakumar
ஜூன் 25, 2025 12:20

கப்ஸா கட்சி கப்ஸா விடுறான்


SUBRAMANIAN P
ஜூன் 25, 2025 15:05

தவறான புரிதல் தம்பி. இது கட்சி மாநாடு இல்ல.. எதுக்கு நாம் தமிழர் கட்சி கூட்டத்தோட இந்த முருக பக்தர் மாநாடை கம்பேர் பண்ணுற. சொல்லப்போனா ஒவ்வொருதருக்கும் தானாகவே அந்த பொறுப்பு வரணும். இன்னும் நிறைய பக்குவம் வேணும். அது NTK கட்சிகாரங்களுக்கும் கிடையாது.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 11:22

முருகக் கடவுள் எல்லாம் அறிந்தவன். தமிழ் மட்டுமே அறிந்த தமிழ்க் கடவுள் என்று கூறி அவரைக் குறுக்க வேண்டாமே. மலாய்,சீனர் ,சிங்களவர் மட்டுமல்ல. பல வடஇந்திய மக்களும் வழிபடுகின்றனர். அவர் எல்லோருக்குமான கடவுள்.உத்தரகாண்ட் அரசு கூட முருகன் ( கார்த்திகேயன்) ஆலயத்தை எழுப்பி எல்லாத் திருவிழாக்களும் நடத்துகிறது.


venugopal s
ஜூன் 25, 2025 11:02

அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம் என்று பாஜகவையும் சேர்த்துத் தானே சொல்கிறீர்கள்?


நாஞ்சில் நாடோடி
ஜூன் 25, 2025 12:21

இந்த எகத்தாளம் இன்னும் சில நாட்களில் அடங்கும் ...


Ramkumar Ramanathan
ஜூன் 25, 2025 10:57

all political parties must learn from this conference, crowd management is a critical subject for all who manages large gatherings. appreciate the organisers for the event which was conducted without much support from the govt and police side


சின்னசேலம் சிங்காரம்
ஜூன் 25, 2025 10:51

உண்மையிலேயே மாநாட்டமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான். குவாட்டர் பாட்டிலும் கோழி பிரியாணியும் கொடுத்து கூட்டம் கூட்டும் அரசியல் கட்சிக்காரர்கள் இதை பார்த்து வெட்கப்பட வேண்டும்


ஜெகதீஷ்
ஜூன் 25, 2025 10:25

பல ஆன்மீக கூட்டங்கள் நடைபெற வேண்டும். இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்.


Oviya Vijay
ஜூன் 25, 2025 10:15

முதலில் நாம் ஒன்றை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்... இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களை இங்கே யாரும் குறை சொல்லவில்லை. ஏதோ செய்கிறார்கள்... என்ன தான் செய்கிறார்கள் பார்க்கலாம் என்ற எண்ணம் தான் அவர்களிடத்தில் மேலோங்கியிருந்திருக்கும். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் மேடையில் வீற்றிருந்த சிலரும் தான் இந்த மாநாட்டை அரசியலுக்கு ஆதாயமாக்க முற்பட்டனர். அவர்களது உள்மனமே அதை ஒப்புக் கொள்ளும்... அதனால் தான் நேற்றைய என் பதிவில் கூறினேன்... 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் முருகன் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது... இத்தனை செய்துமா நாம் தேர்தலில் தோற்றோம் என எண்ணி எண்ணியே வேதனை படப் போகிறார்கள்... எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த மக்கள் 2026 தேர்தலில் அவரவர்கள் விருப்பப்படி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஓட்டளிப்பர்... ஆன்மீக மாநாட்டின் மூலம் ஆதாயம் தேட முற்பட்ட சங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம்... அது ஒரு சிறு கூட்டம்... அவ்வளவே...


Keshavan.J
ஜூன் 25, 2025 10:58

உன்னை மாதிரி பொறம்போக்குகள் இருக்கும் போது தீ மூ க ஜெயிக்கும் ஆனால் அது நிரந்தரம் அல்ல. சாராயம், பணம் பொருள் கொடுத்தால் தான் வெற்றி பெற முடியும். சரியான ஆளா இருந்தா நாம் தமிழர் கட்சி மாதிரி தனியா பணம் பொருள் கொடுக்காமல் தேர்தலில் நிக்க சொல்லு அப்புறம் இங்கே வந்து...


vivek
ஜூன் 25, 2025 11:03

பாவம் இந்த சாம்பிராணி.....எப்படி எல்லாம் கம்பி கட்டி சமாதானம் பண்றான் பாருங்க.....


Mettai* Tamil
ஜூன் 25, 2025 11:22

நானும் அதையே தான் சொல்றேன் , காலங்காலமாக ஒரு ஓட்டு வங்கிக்காக, இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் ஊழல் நாத்திக பிரிவினைவாத கும்பல்களுக்கெதிராக ஒன்றுபட்டு போராடவேண்டும் என்ற உணர்வு பிஜேபி கட்சியால் தான் நடந்தது .இனி இந்த ஒற்றுமை கூடத்தான் செய்யும் எனவே நீங்கள் சொல்லும், அடையப்போகும் அதிர்ச்சி அளப்பரியது என்பது இந்த ஊழலுக்கு தான் நடக்க போகிறது ..ஒரு குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தி ஆதாயம் தேட முற்படும் ஊழல் மங்கிகளுக்கு மாத்திரமே ஏமாற்றம் உறுதி ...


புதிய வீடியோ