உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை; அ.தி.மு.க., விளக்கம்

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை; அ.தி.மு.க., விளக்கம்

அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்டுள்ள பதிவு:மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அ.தி.மு.க., மீது அவதுாறான கருத்துகளை அள்ளித்தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பி விடலாம் என தி.மு.க., எண்ணுகிறது.தி.மு.க., அமைச்சர்கள் வரிசையாக பேட்டி கொடுக்க, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பெயரில், வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும், தி.மு.க., கக்கியுள்ளது. தி.மு.க.,வின் இந்த விஷம பிரசாரம், நம் திராவிட கொள்கையையே பாதுகாப்பற்றதாக காட்டக்கூடிய ஒரு மோசமான செயல். அரசியல் செய்கிறோம் என்ற பெயரில், திராவிடத்தை வலுவற்ற கொள்கைபோல கட்டமைக்க முயலும் தி.மு.க.,வின் சதிச்செயல் கண்டனத்திற்குரியது. ஈ.வெ.ரா., அண்ணாதுரையின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற, அண்ணாதுரையின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள். ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க., அதனால்தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு, பொதுச்செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையில், அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். எந்தவித அரசியல் நோக்கத்திலும் அதில் பங்கேற்கவில்லை. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை.அதேபோல், அந்த மாநாட்டில், ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது; கண்டனத்துக்குரியது.உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக, எங்கள் கவனத்திற்கு வரவில்லை. ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரின் கொள்கைப்பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அ.தி.மு.க.,விற்கு, அவதுாறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க., பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.அதேபோல், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தன் தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த பேரூர் ஆதீனத்தின் நுாற்றாண்டு விழாவில்தான் கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்., விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதை அவரே தெளிவுபடுத்தி விட்டார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

புரொடஸ்டர்
ஜூன் 24, 2025 10:34

பொய்யான அறிவிப்புகள் வெளியிடுவது அதிமுகவின் கொள்கை.


Minimole P C
ஜூன் 24, 2025 07:41

Both AIADMK and DMK have no policy except tell something about EVR and Anna which they never follow just using it to loot public money. If these two were honest and corrupt free there is no need for another party to rule. People are tired of the statements they make. People seek native but other parties including BJP couldnt address the exact need of the people and because of that these two still exits.


சமீபத்திய செய்தி