உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து எங்கே; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கலாசார கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூற மனம் இல்லையா என்று, தமிழக முதல்வருக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gqhv77zo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் ஸ்டாலின், நண்பகல் கடந்தும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களை புறக்கணித்து வருகிறார்.மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் ஆவின் பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.ஆங்கில புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் கலாசாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து கூற மனமில்லையா? தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் தி.மு.க., என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே தி.மு.க., பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்-தொடர்ந்து தமிழர்களின் மத, கலாசார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுகவிற்கு ஓட்டுச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

பேசும் தமிழன்
ஏப் 15, 2025 07:44

அவர் தெலுங்கு வருடப்பிறப்பு.. கன்னட வருடப்பிறப்பு.. மலையாள வருடப்பிறப்புக்களுக்கு காலை வாழ்த்துக்கள் கூறுவார்.. ஆனால் தமிழ் வருடப்பிறப்புக்கு எப்படி வாழ்த்துக்கள் கூறுவார்?


essemm
ஏப் 15, 2025 06:50

எங்கள் திராவிட மாடலுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். மற்றபடி இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மட்டுமே தெரியும். வேண்டுமென்றால் உங்களுடைய ஹிந்துக்களுடைய பண்டிகைகளுக்கு. பிறந்தநாளுக்கு. நீங்களே கொண்டாடுங்கள் என்று சொல்லிவிட்டார். ஏற்கெனவே.


Padmasridharan
ஏப் 15, 2025 06:16

"தை" தமிழ் புத்தாண்டா அ சித்திரை புத்தாண்டா.. THamiZhã_தமிழா


vinoth kumar
ஏப் 15, 2025 01:40

ஒரு தமிழன் முதல்வராக வரும்போது தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து வரும்.


இராம தாசன்
ஏப் 14, 2025 21:41

சுடலையின் mind வாய்ஸ் - விஷு பண்டிகையும் புத்தாண்டு கூட வந்து விட்டதே - தனியாக வந்து இருந்தால் நமது சேட்டன்களுக்கு வாழ்த்து சொல்லி இருப்போம் - வட போச்சே


Mehrudeen Mehrudeen
ஏப் 14, 2025 21:38

தைமாதம் தமிழ் வருட பிறப்பு என்பதுஅவர்கள் கொள்கை.


Bala
ஏப் 14, 2025 22:06

உங்க கொள்கையை தூக்கி குப்பைல போடுங்க.தமிழக முதல்வர் எல்லோருக்குமான முதல்வர்தான்


C.SRIRAM
ஏப் 14, 2025 23:04

இஷ்டத்துக்கு தமிழ் வருடபிறப்பை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை . வேண்டுமென்றால் தெலுகு வருடப்பிறப்பை மாற்றட்டும் ஓங்கோல் வந்தேறிகள்


Svs Yaadum oore
ஏப் 14, 2025 21:28

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்....இங்குள்ள மதம் மாற்றி திராவிட கழிசடை வாழ்த்துகள் தமிழனுக்கு தேவையில்லை ....


ManiK
ஏப் 14, 2025 21:20

இந்த கேவலமான திமுக அரசிடம் ஏன் வாழ்த்து சொல்லலைனு கேட்டா, சாதாரண மக்களாகிய நம்மையே ப்பாசிஸ்ட் அது இதுனு பழிபோடும்.


Bala
ஏப் 14, 2025 20:45

இந்த தமிழ் புத்தாண்டு திருநாளில் , தமிழக மக்களுக்கு வாழ்த்து சொல்லாத தமிழின துரோகி, தமிழர்களின் அவமான சின்னம், தமிழை காட்டுமிராண்டி என சொன்னவரின் வழி வந்த திருடர் கூட்ட தலைவன், கஞ்சா கூட்டத்தின் தலைவன், தமிழக பெண்களை, சைவ வைணவ இந்துக்களை தொடர்ச்சியாக அவமான படுத்தும் கட்சியை வரும் 2026 இல் படுதோல்வி அடைய செய்ய தமிழக மக்களாகிய நாம் உறுதி ஏற்போம்


SANKAR
ஏப் 14, 2025 20:44

Thai first day is the new year day according to DMK philosophy.On that day Pongal the biggest festival of TN is celebrated and DMK vips do greet people.Similarly official Malayalam new year first day of chingam month comes in August September.Vishu in April is also important to them but not considered as New year day


புதிய வீடியோ