உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்

மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி வேண்டும் : தமிழக அரசுக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மாநில பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன. மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைக்கிறது. படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது? திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது. நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராஜா
ஜூலை 05, 2025 23:01

மாநில மற்றும் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் இருப்போர் இன்னும் எதிர் காலத்தில் வரப்போகிறவர்களால் பெண்களுக்கு மற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை தருகிறது.


Ramesh Sargam
ஜூலை 05, 2025 21:13

தமிழகத்தில் மொத்தத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழக காவல்துறை கட்டவிழ்த்து விட்ட காளைமாடு எப்படி ரோட்டில் போவோரை முட்டுமோ அது மாதிரி விசாரணைக்கு வருவோரை மிருகத்தை விட மோசமாக நடத்துகின்றனர்.


Svs Yaadum oore
ஜூலை 05, 2025 20:13

பெண் பிள்ளைகளை பள்ளி கூடம் அனுப்ப மாணவிகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்ய வேண்டுமாம் ......இப்படி ஒரு கோரிக்கை எழுப்பினால் மானமுள்ள ஒரு அரசு நாண்டுகிடும் ....விடியல் திராவிடனுங்களுக்கு மானம் வெட்கம் என்று என்னிக்குமே இருந்தது கிடையாது ....


Svs Yaadum oore
ஜூலை 05, 2025 20:09

ஒரு ஆசிரியர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லையாம் ...இந்த பள்ளி ஆசிரியர் முழுக்க லஞ்சத்தில் நியமனம் ...பள்ளியில் சொல்லி கொடுப்பது ராமசாமி திராவிட கல்வி ..பள்ளி பாட திட்டத்தில் ஆத்திச்சுடி கொன்றைவேந்தன் சமூக நீதி மத சார்பின்மையாக நீக்கி விட்டார்கள் ....பள்ளி கல்வி முழுக்க மதம் மாற்றும் கும்பல் ஆக்கிரமித்துள்ளது .....விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் ??.....இந்த திராவிட ராமசாமி ஆசிரியங்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமாம் ...


Svs Yaadum oore
ஜூலை 05, 2025 20:03

விடியல் திராவிடனுங்க ஆட்சியில் பள்ளி மாணவிகளை சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் ஆட விட்டு அதை பதிவு செய்து வெளியிடுகிறது பள்ளி கல்வித்துறை ..பள்ளி கலைவிழாவாம் ..பள்ளி கல்வி முழுக்க சீரழிந்தது ....அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை .....விடியல் ஆட்சியில் மிக கேவலமான துறை பள்ளி கல்வி துறை ....