வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Dear Press, dont publish these types of forgeries informations ...
காவிரி நடுவர் மன்ற நீதிபதியாக இருந்த நேர்மையான சித்ததோஷ் முக்கர்ஜியை பதவியை விட்டு ஓடச் செய்தனர்.
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் புதிய சிக்கலை உருவாக்கும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.அவரதுஅறிக்கை;காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க் கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி, நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும், பேராபத்தாக முடியும். நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன். துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து ஜூன் 27ம் தேதி தஞ்சாவூரில் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சீமான் கூறி உள்ளார்.
Dear Press, dont publish these types of forgeries informations ...
காவிரி நடுவர் மன்ற நீதிபதியாக இருந்த நேர்மையான சித்ததோஷ் முக்கர்ஜியை பதவியை விட்டு ஓடச் செய்தனர்.