உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

விமானம் செங்குத்தாக புறப்பட, தரையிறங்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விமானம் செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கவும் உதவும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில், விமானங்கள் தரை இறங்குவதற்கு பல ஆயிரம் அடி நீளம் கொண்ட நீண்ட ஓடுபாதைகள் தேவையாக உள்ளன. ஓடுபாதை நீளம் அதிகமாக இருந்தால் மட்டுமே, பெரிய அளவிலான விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் முடியும். இதனால் இடப் பற்றாக்குறையுள்ள நகரங்களில் விமான நிலையம் அமைப்பது பெரும் சவாலாக இருக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6xl85t6j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதை உருவாக்கிய சென்னை ஐஐடி விண்​வெளி பொறி​யியல் துறை பேராசிரியர் பி.ஏ.​ராமகிருஷ்ணா, இணை பேராசிரியர் ஜோயல் ஜார்ஜ் மனத​ரா, ஆராய்ச்​சி​யாளர் அனந்து பத்​ரன் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விமானம் நின்ற இடத்தில் இருந்தே செங்குத்தாக மேலே எழும்பி பறக்க முடியும். முன்னோக்கி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இறங்கும்போதும், அதுபோலவே செங்குத்தாக இறங்கி விட முடியும்.விமானம் தரையிறங்க நீண்ட ஓடுபாதைகள் தேவையில்லை. பெரிய விமான நிலையங்களை அமைக்க முடியாத கரடுமுரடான நிலப்பரப்புகளில் கூட இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும்.பல்வேறு இடங்களுக்கு விமான போக்குவரத்து சேவை சென்று அடைய முடியும். இந்த தொழில்நுட்பம் ராணுவ போக்குவரத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஹைப்ரிட் ராக்​கெட் உந்​து​விசையைப் பயன்​படுத்தி, விமானத்தை செங்​குத்​தாக உயரே செலுத்​த​வும், மென்​மை​யாக தரையிறக்​க​வும் முடி​யும். தொலைதூரப் பகுதிகளுக்கும் விமானங்கள் சென்று வருவதில் புரட்சியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.தாங்கள் உருவாக்கிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக சோதனை செய்து காட்டியுள்ளனர். அவர்களது ஆராய்சிக்கட்டுரை, விமானப் போக்குவரத்து தொடர்பான உலகின் முன்னணி ஆய்விதழிலும் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

அப்பாவி
நவ 01, 2025 05:34

அதான் ராக்கெட் இருக்குதே. அதையே விமானம் மாதிரி பயன் படுத்தலாம்.


Thirumal Kumaresan
அக் 31, 2025 18:28

பாராட்டுக்கள்


Keshavan.J
அக் 31, 2025 18:10

In comment section I see so many anti Indian mentality Tamil People. This is very dangerous for our country. NIA should monitor these people. These people are potential terrorist or terrorist supporters.


naranam
அக் 31, 2025 17:08

அது என்ன கண்டுபிடிப்பு.. எதற்கு பயன்படுத்தலாம் என்று சிறிதளவும் சிந்திக்காமல் அவனவன் இங்கு கருத்துப் போடுகிறான். அந்த ஆராய்ச்சியாளர்கள் விரைவில் இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என்று நம்பலாம்.


என்றும் இந்தியன்
அக் 31, 2025 16:40

Fantastic IIT Madras, Talk to Government for implementing this in another 9-10 months


viki raman
அக் 31, 2025 14:03

ஏற்கனவே இருக்கு இது இந்தியா சொந்த தயாரிப்பு. நன்றி சென்னை iit.


Keshavan.J
அக் 31, 2025 16:19

Can you please tell me which commercial plane take off and land vertically. I need data and facts. Boeing, Airbus and others


Nesan
அக் 31, 2025 13:52

...கிடைத்த வெற்றி


rajasekaran
அக் 31, 2025 13:16

இதெல்லாம் தேவை இல்லை. டைம் வேஸ்ட் பண்ண வேண்டோம். நேராக பறந்தாலே விபத்து ஏற்படுகிறது. ஆராச்சியாளர்கள் விபத்து ஏற்படாமல் எதாவது புதிதாக கண்டு பிடித்தல் மக்களுக்கு மிகவும் நல்லது.


Keshavan.J
அக் 31, 2025 14:42

Ok


Jey a
அக் 31, 2025 15:40

உன் மாதிரி பயந்தாங்கொள்ளி ,, உன் வீட்டிலேயே ஒரு பெண்ணும் மதிக்காது ,,


Keshavan.J
அக் 31, 2025 18:03

Yes, for us you too also waste. Too much negative energy you have.


Anbuselvan
அக் 31, 2025 18:12

எதிர்மறை சிந்தனை போல் தெரிகிறதே


Anbuselvan
அக் 31, 2025 13:02

முயற்சி திருவினையாக்கும்


suresh Sridharan
அக் 31, 2025 12:49

இந்தியாவில் எது கண்டுபிடித்தாலும் இங்கிருக்கும் சில தற்குறிகளுக்கு தலைகால் உடனே....


முக்கிய வீடியோ