உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய வாக்காளர்கள் திமுகவின் பக்கம் வருகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

புதிய வாக்காளர்கள் திமுகவின் பக்கம் வருகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய கட்சிகள் வருகிறதோ, இல்லையோ, புதிய வாக்காளர் திமுக பக்கம் வந்து கொண்டு இருக்கிறார்கள், அது தான் உண்மை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்துவுக்கு முதல்வர் https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=x03b2c6l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். அவருக்கு திமுகவினர் புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: ஒரு வார காலமாக பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு எனது பயணத்தை மேற்கொள்கிறேன். செப்., 8ம் தேதி தமிழகத்திற்கு திரும்பி வருகிறேன். இந்த பயணத்தில் தமிழகத்தை நோக்கி தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. திமுக ஆட்சி அமைந்தது முதல், இதுவரை தமிழகத்திற்கு ரூ.10.62 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டனர். இந்த வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு மத்திய அரசு வெளியிடும் புள்ளி விபரங்களை ஆதாரமாக இருக்கிறது.என்னுடைய ஒவ்வொரு வெளிநாடு பயணத்தின் போது, தமிழகம் அமைதி மாநிலமாக, திறமையான இளைஞர்கள் இருக்க கூடிய மாநிலமாக, வாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலமாக, திமுக ஆட்சி உயர்ந்து இருப்பதால், தரவுகளை விவரங்களை எடுத்து சொல்லி தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து இருக்கிறேன்.ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு உள்ளேன். அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஸ்பெயினில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஜப்பானில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிங்கப்பூரில் 1 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என மொத்தம் 30 ஆயிரத்து 37 நபருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் குறித்து தமிழகம் திரும்பி வந்த பிறகு விளக்கம் அளிப்பேன். தமிழக மக்களின் அன்போடு நான் புறப்பட்டு செல்கிறேன் என்பதையும் உங்கள் இடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: வெளிநாட்டு பயணம் தொடர்பாக அதிமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து கொண்டு இருக்கின்றனர்.முதல்வர் ஸ்டாலின் பதில்: வெளிநாட்டு பயணத்தை பொறுத்தவரை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூட விமர்சனம் செய்து இருக்கிறார். பழனிசாமியை பொறுத்தவரைக்கு தனது பயணம் போல் இருக்கும் என்று நினைக்கிறார். நான் கையெழுத்து போட்டது நடைமுறைக்கு வந்துள்ளது.நிருபர்: திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?முதல்வர் ஸ்டாலின் பதில்: புதிய கட்சிகள் வருகிறதோ, இல்லையோ, புதிய வாக்காளர் திமுக பக்கம் வந்து கொண்டு இருக்கிறார்கள், அது தான் உண்மை.நிருபர்: சி வோட்டர் கருத்து கணிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?முதல்வர் ஸ்டாலின் பதில்: எந்த கருத்து கணிப்பு இருந்தாலும், எல்லா கருத்து கணிப்புகளையும் மிஞ்சி அமோக வெற்றி தான் திமுகவுக்கு கிடைக்க போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் அதிக பேசமாட்டேன். பேச்சை குறைத்து செயலில் காட்ட வேண்டும்.நிருபர்: பீஹாரைப் போல தமிழகத்திலும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு இருக்க வாய்ப்புள்ளதா? முதல்வர் ஸ்டாலின் பதில்: யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை தமிழக மக்களுக்கு உண்டு. ஏன் பீஹார் மாநிலத்திலும் தேர்தல் கமிஷன் நினைத்தது நடக்காது.

பயணம் திட்டம் என்ன?

* நாளை ஜெர்மனியில் அயலக அணி நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்.* செப்., 01- ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு செல்கிறார்.* செப்.,2 அல்லது செப்.,3- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோரை சந்தித்து உரையாடுகிறார்.* செப் 04- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரியத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.* செப்-6- லண்டனில் உள்ள தமிழர் நல வாரியத்தின் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.* செப்-7: லண்டனில் இருந்து சென்னைக்கு திருப்ப புறப்படுகிறார்.* செப்-8: அதிகாலை சென்னை வந்தடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

ramani
செப் 02, 2025 05:33

அப்படியா சொல்லவேயில்லை


xyzabc
செப் 02, 2025 04:38

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும்.


Ethiraj
செப் 02, 2025 02:05

Suit Boot CM


Sri
ஆக 31, 2025 10:29

என் நண்பர் அமைதி மார்கத்தில் பிறந்தவர். ஜமாத்தில் எப்பொழுதும் திமுக ஆதரவு mudivu thaan ஒன்றுபட எடுப்பார்கள், அனைவரும் ஒற்றுமையுடன் ஒட்டு போடுவார்கள். ஹிந்துக்கள் நம் பாரம்பரியம், கோவில் பாதுகாப்பு, எதிர்கால இந்தியாவில் நமது பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒட்டு போட வேண்டும். வரும் கட்சிகள் எல்லாம் மைனாரிட்டி நலன்களை மட்டும் தான் அதிகம் பார்க்கிறார்கள். சமத்துவம் பேச்சில் மட்டுமே உள்ளது.


Sri
ஆக 31, 2025 10:25

போன வாரம் சதுர்த்தி vazhthu வர வில்லை. இருவாரங்களில் வாரம் ஒரு பண்டிகை வருகிறது. பார்க்கலாம்


Matt P
ஆக 31, 2025 13:35

புள்ளையாரை பார்த்தால் அந்த யானை முகம் பயத்தை கொடுக்கலாம் நம்பிக்கை இல்லாதோருக்கு.


Venugopal S
ஆக 30, 2025 22:52

தேர்தல் வந்தால் தெரிந்து விடப் போகிறது,தமிழக மக்கள் ஆதரவு யாருக்கு என்று!


sankar
ஆக 30, 2025 19:37

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது


GMM
ஆக 30, 2025 17:36

புதிய வாக்காளர் சமசீர் கல்வி பயின்று, இருமொழி கொள்கை பின்பற்றி எங்கும் பிழைக்க முடியவில்லை. திமுக பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை. சிறப்பு வாக்காளர் பட்டியலில் தணிக்கை திமுக பலம் குறைக்கும். கூட்டணி, சிறுபான்மை ஆதரவு பெற்று சில ஆதரவு தொகுதியில் வென்றால் தான் உண்டு. முன்பு போல் திமுக ஒரு கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்காது. ஆதார் குடியுரிமை, பிறந்த தேதிக்கு ஆதார ஆவணம் இல்லை என்று அச்சிட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் சேர்க்க பிறந்த நாள் பதிவு, பள்ளி சான்று, வரி எண் அவசியம் ஆகிறது.


சந்திரன்
ஆக 30, 2025 17:17

டிராபிக் ஜாம் ஆகுதாமே அவ்ளோ விடல புள்ளிங்கோ அறிவாலம் நோக்கி நடை பயணம் போறாங்களாம்


joe
ஆக 30, 2025 17:00

முதலீடுகளை ஈர்க்க தொழிலதிபர்களுக்கே தெரியும்