உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்கைஃபால்!

புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஸ்கைஃபால்!

23வது ஜேம்ஸ் பாண்ட் படம் தயாராக இருக்கிறது. இப்படத்திற்காக ஸ்கைஃபால் என்ற பெயரை படக்குழு ரிஜிஸ்டர் செய்துள்ளதாம். இப்படத்திற்கு பைனான்ஸ் செய்யும் எம்.ஜி.எம்., பிலிம்ஸ் நிறுவனமும் , சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் ஸ்கைஃபால் பெயரினை ரிஜிஸ்டர் செய்துள்ளது. இருந்தாலும் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.இத்திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரெய்க் நடிக்கிறார். இப்படம் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 26ம் தேதியன்று லண்டன் மற்றும் அயர்லாந்திலும் ; நவம்பர் 9ம் தேதியன்று அமெரிக்காவிலும் ரிலீசாகும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை