உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாட்ஸாப் குழுவில் பாக்., புகழ்பாடிய 30 பேர்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

வாட்ஸாப் குழுவில் பாக்., புகழ்பாடிய 30 பேர்: என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

சென்னை: பாகிஸ்தான் புகழ்பாடி, 'வாட்ஸாப்' குழுவில் தகவல் பரப்பிய, தமிழகத்தை சேர்ந்த 30 பேர், பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களா என, கோவை, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொந்தளிப்பு

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணியர் 26 பேரை, ஏப்ரல் மாதம் 22ம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்திய ராணுவத்தினர், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், நம் நாட்டில் வசிக்கும் சிலர், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு எதிரான தகவல் பரப்பி வருகின்றனர். அவர்களின் பின்னணி குறித்து, மத்திய உளவு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. தொடர் விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த, 30 பேர், பாகிஸ்தான் புகழ்பாடி, 'வாட்ஸாப்' குழுக்களில் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள், பயங்கரவாத ஆதரவு அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அவர்கள் குறித்து, கோவை, தென்காசி, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:தடை செய்யப்பட்ட, பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினர், பல்வேறு பெயர்களில், புதிய அமைப்புகளை துவக்கி செயல்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. அவர்களை ஐ.எஸ்., மற்றும் அல் குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினர் ஒருங்கிணைத்து வருவதாகவும் ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து, தீவிர விசாரணை நடக்கிறது.

தகவல் பரிமாற்றம்

சில தினங்களுக்கு முன், வாட்ஸாப் குழுக்களில், ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையை விமர்சித்து, பதிவுகள் வெளியாகி உள்ளன. அத்துடன் நாச வேலை குறித்த தகவல் பரிமாற்றமும் நடந்துள்ளது. இதில், 30 பேர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள், பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களா என்பது குறித்தும், அவர்களை இயக்கும் நபர்கள் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

ஆரூர் ரங்
ஜூன் 14, 2025 11:49

அரைகுறை தேசப்பிரிவினை நிரந்தரத் தலைவலியை தந்துகொண்டிருக்கிறது.


Venu koppal
ஜூன் 14, 2025 09:57

தேசத் துரோகம் = மரண தண்டனை


VENKATASUBRAMANIAN
ஜூன் 14, 2025 08:23

எதற்காக விசாரணை நாடு கடத்துங்கள். பாகிஸ்தானுக்கே போகட்டும். தின்பது இந்தியாவில் விசுவாசம் காட்டுவது பாகிஸ்தானுக்கா. நாயை விட கேவலமானவர்கள். நாய் நன்றி உள்ளது


நிக்கோல்தாம்சன்
ஜூன் 14, 2025 08:05

வெளிநாட்டில் இருந்து வந்து போனவர்களுக்கு பிறந்தவர்கள்


RAJ
ஜூன் 14, 2025 08:00

வெளுத்து விடுங்கள் அய்யா.. நொங்கை பிதுக்கி விடுங்கள்...


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 14, 2025 07:59

விடியல் சாரே கருது சுதந்திரம் ஒடுக்க பிஜேபி சதி அப்படின்னு கொளுத்தி போடு , போராட்டம் பண்ணீங்க நா, ஒட்டு பிச்சிக்கும்


S.L.Narasimman
ஜூன் 14, 2025 07:59

பிடித்து லாடம் கட்டுங்கள்.


Barakat Ali
ஜூன் 14, 2025 07:49

விஷயம் மிக எளிதானது ..... அவர்களை அங்கேயே அனுப்பிவிடுங்கள் .... பிடித்து வைத்து விசாரணை என்பதெல்லாம் தேவையே இல்லை .....


D Natarajan
ஜூன் 14, 2025 07:48

உடனே அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் .


Mecca Shivan
ஜூன் 14, 2025 07:11

NIA முதலில் கைதுசெய்யவேண்டிய நபர்கள் சைமன் மற்றும் தேருமா வை ..